ஈக்வெடார் அரசுக்கே தெரியாமல் கடலடியில் இருப்பாரோ?
நித்தியானந்தா என்ற பெயரிலோ ராஜசேகரன் என்ற பெயரிலோ யாரும் தங்கள் நாட்டில் இல்லை என சொல்லிவிட்டது ஈக்வெடார் அரசு
பகவான் நித்திசாமி விவகாரத்தில் தன் பெயர் அடிபடுவதை கண்ட ஈக்வெடார் அரசு, தங்கள் நாட்டில் எப்பகுதியினையும் விற்கவிலை என்றும் அங்கு இன்னொரு நாடு அமையமுடியாது என்றும் கடும் தொணியில் எச்சரித்திருக்கின்றது
ஆக நித்திசாமி எங்கிருக்கின்றார் என தெரியவில்லை, ஒருவேளை ஈக்வெடார் அரசுக்கே தெரியாமல் கடலடியில் இருப்பாரோ?
நித்தி மேல் உள்ள மிக பெரும் வழக்கு இரு பெண்களை பெற்றோர் சம்மதமின்றி அழைத்து வைத்திருக்கும் வழக்கு
இந்த விஷயத்தில் நாம் நித்திசாமிக்கு ஒரு ஆலோசனை சொல்கின்றோம், முன்பு ஒரு சிக்கல் இப்படி வந்தபொழுது இரு நீதிபதிகள் அரசுக்கே தெரியாமல் தீர்ப்பு எழுதி விவகாரத்தை முடித்தார்கள்
நீங்கள் அந்த நீதிபதிகளை அழைத்தால் நல்லது
ஆம் கொளத்தூர் மணி மற்றும் தியாகு என இரு நீதிபதிகள் தமிழகத்தில் உண்டு, கவிஞர் தாமரை என்பவர் கண்ணீரை தவிர எல்லா பிரச்சினைக்கும் குறிப்பாக பெண் கடத்தலுக்கு தீர்ப்பு எழுதுவார்கள் சாமி அவர்களை நாடுதல் நலம்


ஆம் அழையுங்கள் பறை அடித்தபடி இப்படி பாடி வருவார்கள்…
“திருநெல்வேலி அல்வாடா
திருச்சிமலை கோட்டடா
ஈக்வெடாரை அலறவிட்டால் சாமிடா…
கருப்பு சட்டை பெரிருடா
அது இனி எதுக்குடா
உடுக்கு சத்தம் கேட்டா நம்ம சாமிடா…”