ஈராக் காட்சிகள் இந்திய சுதந்திர போர் கால காட்சிகள் போல அப்பட்டமாக தெரிய தொடங்கிவிட்டது

ஈராக் காட்சிகள் இந்திய சுதந்திர போர் கால காட்சிகள் போல அப்பட்டமாக தெரிய தொடங்கிவிட்டது, மிகபெரும் பரபரப்பு தொற்றிகொண்டது

ஆம் சமீப நாட்களாகவே அமெரிக்காவின் பொம்மை அரசுக்கு எதிராகவும் அமெரிக்க அரசுக்கு எதிராகவும் ஈராக்கிய மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சீரழியும் பொருளாதாரம், எண்ணெய் கொள்ளை இன்னபிற சுரண்டல்கள் அவர்களை களத்துக்கு இறக்கிவிட்டது

ஈரானும் அதன் பின்னணியில் இருக்கின்றது, ஈரான் லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கமும் கட்டா ஹிஸ்புல்லா எனும் ஷியா அமைப்பும் அவர்கள் பின்னால் இருக்கின்றன‌

இதே கிளர்ச்சியினை ஈரானில் பற்றவைக்க பார்த்தது அமெரிக்கா, 8 பத்திரிகையாளரை மிக துல்லியமாக தூக்கிய ஈரான் அவர்களுக்கும் அமெரிக்காவுக்குமான உறவை உலகறிய சொன்னபின் ஈரானில் அமைதி திரும்பிற்று

ஆம் தன் நாட்டின் எல்லா போராட்டமும் ஒரு சிலரால் தூண்டிவிட படும் என்பது அவர்கள் தத்துவம், ஈரான் அதில் 1980ல் இருந்தே கவனமாக இருந்த நாடு

தன் நாட்டின் உள்ளே வந்த அமெரிக்காமேல் கடும் ஆத்திரத்தில் இருந்த ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகளை ராக்கெட் வீசி தாக்கியது

சதாம் காலத்துக்கு பின் ஈராக்கில் தன்மேல் விழும் அடியினை பொறுக்காத அமெரிக்கா தன் எப் 21 ரக விமானம் மூலம் ஈரானிய ஆதரவு தீவிரவாதிகளை தாக்கி சிலரை கொன்றது

அமெரிக்காவுக்கு அவர்கள் தீவிரவாதிகள், ஈராக்கியருக்கு அவர்கள் சுதந்திர வீரர்கள்

அந்த போராளிகளின் அடக்கம் முடிந்தவுடன் திரண்ட மக்கள் கூட்டம் ஈராக்கிய பாக்தாத் அமெரிக்க தூதரகத்தை அடித்து துவம்சம் செய்துவிட்டன

இப்பொழுது ஈராக்கிய அமெரிக்க தூதரகம் எரிந்துகொண்டிருக்கின்றது, ஒரு சிலர் தப்பியிருக்கின்றனர் எனினும் துப்பாக்கி காட்டியபடி சில அமெரிக்க வீரர்கள் சுற்றி கொண்டிருக்கின்றனர்

கட்டடத்துக்கு நெருப்பு வைக்கபட்டு அது எரியும் நிலையில் அமெரிக்க வீரர்கள் வெளிவர வேண்டும் வந்தால் கூட்டம் கொன்றுவிடும்

இல்லாவிட்டால் உள்ளேயே எரிந்துபோவார்கள்

அமெரிக்காவுக்கு அரேபியாவில் 12க்கும் மேற்பட்ட ராணுவதளம் உண்டு, அவற்றில் இருந்து படைபிரிவுகள் சென்று இனி அவர்களை மீட்கலாம்

அந்த மீட்புக்கு இடைஞ்சல் செய்தால் நடப்பதே வேறு என மிரட்டுகின்றார் டிரம்ப்..

ஆக நடக்கும் காட்சிகள் சொல்லும் விஷயம் இரண்டு

முதலாவது இனி அமெரிக்கா ஈராக்கை ஆள்வது அவ்வளவு சுலபமல்ல, ஈரானும் ஈராக்கியரும் சேர்ந்து அவர்கள் மேல் சுதந்திரபோர் தொடுத்துவிட்டார்கள்

இரண்டாம் விஷயம், இந்த காட்சிகள் 1980 லெபனானிய காட்சிகள் போன்றது

ஆம் அப்பொழுது அமெரிக்க படைகள் அங்கிருந்தன, ஈரானிய ஹெஸ்புல்லா தாக்கியதில் ஒரே நேரத்தில் 300 அமெரிக்க வீரர்கள் சாக லெபனானை காலி செய்தது அமெரிக்கா

1980ல் ஈரானிய புரட்சி ஏற்பட்டபொழுது கோமேனி செய்த முதல் விஷயம் அமெரிக்க தூதரகத்தை கைபற்றி அமெரிக்க அதிகாரிகளை சிறைபிடித்தது

அமெரிக்காவில் இருக்கும் ஈரானிய மன்னன் ஷா மற்றும் அவனின் சொத்துக்களை கொடுத்துவிட்டு இவர்களை வாங்கிகொள் என பகிரங்கமாக அமெரிக்காவிற்கு சவால்விட்டார் கோமேனி

பொதுவாக தூதரகம் விசா மட்டும் கொடுக்காது, உளவு தகவல்களின் களஞ்சியமே அதுதான்

நம் சென்னையில் இருந்து கூட அமெரிக்காவுக்கு கேபிள் அனுப்புவார்கள், மிசா சர்ச்சையில் கூட ஸ்டாலின்பற்றி அமெரிக்க தூதர் அனுப்பிய கேபிளை நாம் பார்க்கமுடிந்தது, அமெரிக்காவுக்கு சென்னையில் என்ன நடந்தால் என்ன? ஏன் முதல்வரின் மகனை எல்லாம் உளவு பார்த்து அறிக்கை அனுப்பினார்கள் என்றால் அதுதான் வல்லரசு

ஒவ்வொரு நாட்டிலும் யார் மூலம் எப்படி குழப்பம் விளைவிக்கலாம் எனும் நுட்பம் அது, அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி திமுகவினரை சந்திப்பது உங்களுக்கு தெரியும், சமீபத்தில் கூட பிரிட்டானிய தூதர் ஸ்டாலினை சந்தித்தார்

சரி விஷயத்துக்கு வரலாம்

அப்படிபட்ட ஆபத்தான தூதரகம் ஈரானில் இருக்க கூடாது என சிறைபிடித்து அதிகாரிகளை பணயகைதிகளாக்கி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார் கோமேனி, அவர்களை மீட்க சென்ற அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கூட வீழ்த்தபட்டன‌

பின் எப்படியோ அவர்களை பின்புறமாக அதாவது ஈரானுக்கு செய்யவேண்டியதை செய்து மீட்டுகொண்டு ஓடியது அமெரிக்கா இன்றும் அமெரிக்க தூதரகம் ஈரானில் இல்லை

இனி ஈராக்கிலும் இருக்காது போலிருகின்றது, இதெல்லாம் ஈரானின் திட்டமன்றி வேறல்ல‌

டிரம்பின் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த விவகாரத்தால் களையிழந்தது , டிவிட்டரில் தூங்காமல் டிவிட் செய்துகொண்டே இருந்தார் டிரம்ப்

கூடுதல் படைகள் விரைகின்றன, எனினும் இனி நாம் ஈராக்கில் நிம்மதியாக இருக்கமுடியாது என்பது மட்டும் அமெரிக்காவுக்கே புரிந்துவிட்டது