ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை

ஈரானில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களை உலக மீடியாக்கள் குறிப்பாக அமெரிக்கா “ஈரானில் மனுகுல நெருக்கடி” என சொல்ல ஆரம்பித்தவுடன் சட்டென தன் நாட்டின் இணைய தொடர்பு உட்பட எல்லா தொடர்புகளையும் துண்டித்தது ஈரான்

ஒரு விஷயமும் வெளிதெரியாமல் பார்த்துகொண்டு கலவரத்தை அடக்கிகொண்டிருக்கின்றது

இந்நிலையில் தகவல் தொடர்பை துண்டித்த ஈரானிய தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடை விதித்துள்ளது அமெரிக்கா

ஈரான் அதிபர், அதி உச்ச தலைவர், ராணுவ தளபதி என பலரை தொடர்ந்து இப்பொழுது தகவல் தொடர்பு அமைச்சர் மேல் தடையாம் , இவர்கள் எல்லாம் மனுகுலத்துக்கு எதிரானவர்களாம்

இவர்கள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து மோடியினை நினைத்து பெருமூச்சு விடுகின்றார்கள்

ஆம் மோடிமேலும் ஒருகாலத்தில் அமெரிக்கா தடை விதித்து “மனுகுலத்துக்கு எதிரானவர்” என சொல்லி விசா மறுத்தது, அதே அமெரிக்க்கா இப்பொழுது மோடிக்கு சிகப்பு கம்பளம் எல்லாம் விரிக்கின்றது

நமக்கும் அப்படி காலம் வரும் என கண்களை துடைக்கின்றது ஈரானிய கோஷ்டி

மோடி எவ்வளவு பேருக்கு ஆறுதல் வழங்குகின்றார் பார்த்தீர்களா?