ஈரானில் போராட்டம் தீவிரமாகின்றது
ஈரானில் போராட்டம் தீவிரமாகின்றது, ஆளும் கோஷ்டியினை விரட்டி அடிப்பதே தீர்வு என மக்கள் போராட வந்துவிட்டார்கள்
1980ல் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் விஷயம் இது, போராட்டம் ஈரானின் காவல்துறையால் கட்டுபடுத்தமுடியவில்லை இனி ஈரானிய ராணுவம் களத்தில் இறங்கும் போல
ஈரான் ராணுவம் அமெரிக்கா, இஸ்ரேல் என பெரும் சக்திகளுடன் மோதும் என எதிர்பார்த்தால் அது சொந்த மக்களுடன் மோதபோகின்றது
ராஜதந்திரத்தில் ஈரானை இழுத்துவிட்டு பார்த்துகொண்டிருக்கின்றது அமெரிக்கா
ஈரான் தன் நாட்டு சிக்கலில் இருக்கும் நேரம் பார்த்து சிரியாவில் ஈரானின் முகாம்களை போட்டு அடித்து தகர்க்கின்றது இஸ்ரேல்
ஈரானின் ராணுவம் தன் சொந்த மக்களையே எதிர்க்கும் அளவுக்கு செல்லாது என்பதால் ஈரானில் எதுவும் நடக்கலாம் மாபெரும் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கின்றது உலகம்
மிக முக்கியமாக கால்பந்து பார்க்கும் ரசிகன் போல அமர்ந்திருக்கின்றார் டிரம்ப்..