ஈரான் தன் பதிலடியினை மிக தந்திரமாக செய்கின்றது
ஈரான் தன் பதிலடியினை மிக தந்திரமாக செய்கின்றது, நேருக்கு நேர் அமெரிக்காவினை அடிக்காமல் அமெரிக்கா எங்கெல்லாம் கால்வைத்து சண்டையிடுகின்றதோ அங்கு நொறுக்குவது என தீர்மானித்துவிட்டார்கள்
அப்படி ஏமனை குறிவைத்துவிட்டது , அங்கு ஹவுத்தி போராளிகளுக்கு புது பலம் கிடைத்திருக்கின்றது உபயம் ஈரான் என்பது ரகசியமல்ல
இதனால் ட்ரோன் தாக்குதலை செய்திருக்கின்றது ஹவுத்தி, அது 70 அமெரிக்க சவுதி கூட்டணி வீரர்களை கொன்றுவிட்டது, இன்னும் முழு சேதம் வரவில்லை
ஏமனில் இருந்து ஹவுத்தி மூலமாக சவுதியினை அமெரிக்கர்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் ஈரானியர்
கவனியுங்கள் அமெரிக்க மண்ணுக்கு வெளியே, ஈரானுக்கும் வெளியே ஏமனில் இருவரும் மோதிகொண்டிருக்கின்றார்கள், இருநாட்டு மக்களும் பாதுகாப்பாக இருக்க ஏமன் மக்கள் செத்துகொண்டிருக்கின்றார்கள்