ஈரான் பக்கம் போர்மேகம் கலைவதில் சங்கம் பெரும் ஆறுதல் அடைகின்றது
ஈரான் பக்கம் போர்மேகம் கலைவதில் சங்கம் பெரும் ஆறுதல் அடைகின்றது
ஆம், அப்பக்கம் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டிருக்கின்றது, அது இனி விரைவில் அகலும்
சங்கத்துக்கு இதனால் என்ன மகிழ்ச்சி என கேட்டால் விஷயமிருக்கின்றது
தலைவி குஷ்பு துபாய் ஊடாக லண்டனுக்கு அடிக்கடி பறப்பார், லண்டனும் அவர் வந்தால் பெரும் மகிழ்ச்சி அடையும்.
இளவரசி டயானா இல்லா குறையினை அத்தேசம் அப்படித்தான் போக்கி கொண்டிருக்கின்றது.
அத்தோடு என்ன இருந்தாலும் கோஹினூர் வைரம் வந்த தேசத்துகாரி அல்லவா அப்படித்தான் மின்னுவார்… என தலைவியினை பார்த்து செல்கின்றார்கள்
இதனால் அடிக்கடி அவர்கள் அழைக்க தலைவியும் லண்டன் செல்வார்
தலைவி விமானம் அரேபியாவினை கடக்கும் பொழுது அந்த பாலைவன ஒட்டகங்கள் கூட குளிர் காற்றை உணருமாம்,, அரேபிய எண்ணெய் கிணறுகள் அந்நொடியில் 100 பேரல் எண்ணெய் அதிகம் கொடுக்குமாம்
அப்படி தலைவி துபாய் ஊடாக செல்லும்பொழுது என்ன ஆகுமோ என மாபெரும் அச்சபட்ட சங்கம், நேற்றே தலைவிக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியது
சங்கம் தலைவியின் மனசாட்சி, ஆனால் தலைவி மனசாட்சி சொல்வதை கேட்கவே மாட்டார், கேட்டால் காங்கிரஸில் நீடிக்க மாட்டார். இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டது
அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ ஷியா தீவிரவாதிகள் தலைவி விமானத்தை கடத்தினாலோ என்ன ஆகியிருக்கும் உலகம் தாங்குமா?
காற்று வீசுமா? கடல் அசையுமா? சூரியனும் நிலாவும்தான் ஒளிகொடுக்குமா?

அந்த மாபெரும் ஆபத்து நீங்கியதில் மகிழ்ச்சி, தலைவி தொடர்ந்து லண்டன் பறக்க வாழ்த்துக்கள்
அப்படியே ஈரானின் அதி உச்ச தலமையான கோமேனிக்கும், அமெரிக்க டிரம்புக்கும் நன்றிகள்..
நாம் என்ன செய்வது பெரும் கணவான்களே, இரண்டாம் உலக போரிலும் இன்னும் பல போரிலும் தாஜ்மகாலை மூடி வைத்து காத்தார்களாம்
அப்படி எம் தலைவியினையும் காக்க வேண்டிய கடப்பாடு சங்கத்துக்கு இருக்கின்றது.