ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள்

ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள், ஈழ தமிழருக்கு யாராவது நல்லது செய்தால் அல்லது நல்லது செய்ய முயற்சித்தால் இவர்கள் ஏக மவுன நிலைக்கு ஜென் நிலைக்கு சென்றுவிடுவார்கள், தமிழக பத்திரிகையும் சினிமாக்காரி இடுப்புக்கு சென்றுவிடும்

ஆம் இதுவரை ராஜிவ்காந்திக்கு பின் எந்த முதல்வரும் கையிலெடுக்கா விஷயத்தை ஈழதமிழருகாக கையில் எடுக்கின்றார் மோடி

விஷயம் ஒன்றுமில்லை, இந்திரா ஈழதமிழருக்கு என்ன தீர்வு வைத்திருந்தார் என்பது அவருக்குத்தான் தெரியும் அதை சொல்லாமலே இறந்தார்

ராஜிவ் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை சேர்த்து தமிழர் மாகாணமாக அறிவித்து அதில் அதிகாரமிக்க மாநில அரசு அமைய தீர்மானித்தார் இதில் ஏகபட்ட உரிமைகள் ஈழதமிழருக்கு இருந்தன‌

ஈழதமிழருக்கு கிடைக்கும் அதி உச்ச தீர்வு அப்போதைக்கும் இப்போதைக்கும் அதுதான்

அதை கிழித்தெறிந்தான் பிரபாகரன், அதற்கேற்ற ஜெவர்த்தேன்வும் ஆடினார் எலலம் நாசமாகி ராஜிவுமில்லை பிரபாகரனுமில்லை கொழும்பு அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்த நினைவினையே கடலில் வீசிற்று

அந்த ஒப்பந்தம் வலிமையானது அது தொடரும் பட்சத்தில் பிரிதொருநாளில் ஈழமாநிலம் தனிநாடு ஆகும், பொதுவாக ஒரு பெரிய நாடு இன்னொரு நாட்டிடம் அவனுக்கு நாடுகொடு என சொல்லமுடியாது, முதலில் மாநிலம் அதன் பின் உரிமை சிக்கல் அதன் பின் வம்பு , இழுப்பு என இழுத்துத்தான் தனிநாடு குரலுக்கே வரமுடியும்

இதை சிங்களன் உணர்ந்தே கொழும்பில் ராஜிவினை கொல்லமுயன்றான், உணரா பிரபாகரன் ராஜிவினை கொன்றான்

ராஜிவுக்கு பின் யாரும் அதை பற்றி பேசவில்லை, சிங்களன் நிச்சயம் மாட்டான் காரணம் அது அவனின் 13ம் சட்டபிரிவினை சீர்திருத்த சொன்னது

ராஜிவுக்கு பின் நரசிம்மராவ், விபிசிங், சந்திரசேகர், தேவகவுடா, குஜரால், வாஜ்பாய், அறிஞர் மன்மோகன் சிங் என ஏராளமானோர் வந்தாலும் யாரும் இவ்விஷயத்தை தொடவில்லை

முதன் முறையாக இந்திய அமைச்சர் ஜெயசங்கர் அதிபராக வந்த கோத்தபாயாவிடம் இந்த அரசு ஈழதமிழருக்கு முறையான உரிமை வழங்க வேண்டும் என்றார்

மேற்கொண்டு இந்தியா வந்த கோத்தபாயாவிடம் மோடி “1987ல் இந்தியாவுடன் இலங்கை செய்த அந்த 13ம் சட்டதிருத்தத்தை அமல்படுத்தவேண்டும்” என நேரிலே சொல்லிவிட்டார்

இது கொழும்புவுக்கு பலத்த அதிர்ச்சி, ராஜிவோடு முடிந்துபோனது என நினைத்த விஷயத்தை மோடி கையில் எடுத்ததும் அலறியது இலங்கை

இதன் அடுத்துதான் ஹம்பாந்தோட்டா சீன துறைமுகம் ரத்து , ஹம்மாந்தோட்டா விமான நிலையத்தினை இந்தியா எடுத்துநடத்தட்டும் என இறங்கிவந்தது கொழும்பு

இந்தியா அதே ஈழதமிழர் உரிமையில் நிலையாய் நின்றது

கொழும்பு யோசித்தது , இப்பொழுது “13ம் சட்டதிருத்தம் நடைமுறைக்கு சரிவராது, அது இலங்கை மக்களிடம் அபிமானம் இல்லா திருத்தம்” என மெல்ல முணங்குகின்றது கொழும்பு

அந்த சட்டதிருத்தபடி தனி ஈழ மாகாண கவுன்சில் அமைக்கபட்டு இந்திய படைகள் ஈழமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வழிசெய்கின்றது

அந்த ஒப்பந்த்தை ஏற்றால் வட இலங்கை இந்திய கட்டுபாட்டுக்குள் செல்லும் என இலங்கை அஞ்சுகின்றது, இந்தியா விடுவதாக இல்லை

கொழும்பு தன் ராஜதந்திர ஆட்டமான பாகிஸ்தானுடன் டீ குடித்தல், சீனாவிடம் பாம்பு சூப் கிடைக்குமா என விசாரித்தல் என நாடகத்தை தொடங்குகின்றது

மோடி இந்திய இலங்கை சட்ட திருத்தலில் உறுதியாக இருக்கின்றார், காட்சிகள் மாறுகின்றன‌

கவனியுங்கள், இந்த திருத்தம் ஈழதமிழர் வாழ்வில் பெரும் திருப்புமுனை கொடுக்கும், 32 ஆண்டுகளுக்கு முன்பாக இதை செய்யத்தான் ராஜிவ் விரும்பினார்

ஆனால் அதை அவரின் மனைவி சோனியா செய்யவில்லை, 15 ஆண்டுகாலம் மத்தியில் இருந்த திமுக செய்யவில்லை

தமிழக அழிச்சாட்டிய கோஷ்டி வாய்ப்பே இல்லா ஈழநாடு என கனவுகாட்டி அரசியல் செய்யுமே தவிர, அம்மக்கள் வாழ , உரிமையுடன் வாழ சாத்தியமான ஒரே வழியான இந்த சட்டதிருத்தம் பற்றி பேசாது

மோடி எது முடியுமோ? எது நடைமுறைக்கு சாத்தியமோ அதை சொல்லி கோத்தபாய கைகளை முறுக்குகின்றார்

நிச்சயம் ஈழதமிழருக்கு 32 ஆண்டுக்கு பின் நல்லது செய்யும் ஒரு பிரதமர் கிடைத்திருக்கின்றார், இதை ஈழதமிழர் உணர்கின்றார்கள், இங்குள்ள தமிழர் உணர்ந்துவிட கூடாது என தமிழக தேசவிரோத கட்சிகளும் அவற்றின் அடிப்பொடி ஊடகங்களும் கவனமாயிருக்கின்றன‌

அதனால் இவற்றை எல்லாம் அவர்கள் சொல்லமாட்டார்கள், தமிழக பத்திரிகைகள் சொல்லாது, சொன்னாலும் குழப்பிவிடும்

நாம் இதை எல்லாம் சொல்வதை நம் சுதர்மமாக வைத்திருக்கின்றோம், அதனால் நாமேதான் சொல்லவேண்டும், சொல்லியும் விட்டோம்

காலங்கள் மிக சரியானது, இலங்கையில் சிங்கள தனிபெரும்பான்மை இனவாதிகள் வரும்பொழுதெல்லாம் இங்கும் ஈழதமிழர்பால் அபிமானம் கொண்ட ஒற்றை தலமையும் வரத்தான் செய்கின்றன‌

ஆனால் ஈழதமிழரை குழப்பி அடித்து தெருவில் விடுவது தமிழக திராவிட மற்றும் தமிழ்தேசிய அழிச்சாட்டியங்கள்

ஈழமக்கள் இதை உணர்ந்து சரியான பாதையினை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு நல்லது, இல்லை மிக மிக கடுமையான சிக்கல்களையே சந்திப்பார்கள், கடந்தமுறை செய்த தவறை இனி செய்யமாட்டார்கள் என நம்புகின்றோம்

நிச்சயம் தமிழக அரசியல்வாதிகள் நல்லவர்கள் என்றால் மோடி எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், ஈழத்தின்பால் அபிமானம் இருந்தால் அதைத்தான் செய்யவேண்டும்

ஆனால் இவர்கள் சுயநலவாதிகள், இப்பொழுதும் தனிநாடு அது இது என குழப்பி ஈழதமிழருக்கு மென்மேலும் சிக்கலை கொடுக்க நினைபார்களே தவிர அவர்கள் அமைதியோ நலனோ பெறுவதை விரும்பமாட்டார்கள், அரசியல்வாதி என்றால் அப்படித்தான்

அவர்களிடம் இருந்து நன்மையினை எப்படி எதிர்பார்க்கமுடியும்?