ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது
சுவிட்சர்லாந்தில் ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது, ஆம் அங்கு மணமகனுக்கு மணமகள் தாலிகட்டி 3 முடிச்சு போட்டிருக்கின்றாள்
காலம் மாறிவிட்டதல்லவா, அதனால் மனைவியே இப்பொழுது நான் ஒழுங்காக சமைப்பேன், போன் எடுக்கமாட்டேன், சத்தியமாக சந்தேகபடமாட்டேன் என பல முடிச்சுகளை போடுகின்றார்களோ என்னமோ?
இது ஈழதமிழருக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் கன்னட மக்களுக்கு புதிது அல்ல சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே அங்கொரு சீர்திருத்தவாதி இருந்தார் அவர் பெயர் பசவண்ணா
இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் பேசிய பெண்விடுதலையினை அன்றே கன்னடத்தில் சொன்ன பசவண்ணா.
அவர் இந்திய வரலாற்றில் முக்கியமானவர், லிங்காயத் பிரிவு அவரால் தொடங்கபட்டது, பெரியாருக்கு 700 ஆண்டுகள் முன்பு பிறந்த பசுவண்ணா பல புரட்சி செய்தார்
பசவண்ணாவினை பெரியாருடன் ஒப்பிட்டால் பசவண்ணா இந்திரா காந்தி, பெரியார் மோடி, இதற்கு மேல் நீங்களே முடிவு செய்யுங்கள்
அப்படி என்ன செய்தார் என்றால் ஏகபட்ட சீர்திருத்தங்களை அன்றே செய்தார், ஆச்சரியமான புரட்சியாளர் அவர், சந்தேகமில்லை
இந்துமதத்தில் சில கொடுமைகள் நடந்த பொழுது சிவலிங்கத்தை முன்னுறுத்தி, லிங்காயத் என்ற சமயத்தை ஏற்படுத்தினார், எடியூரப்பா எல்லாம் அந்த வகை
ஒருவகையில் கன்னியாகுமரியில் விஷ்ணுவின் நாராயண வழிபாட்டை ஏற்படுத்தி, அதாவது இந்துவாக இருந்து இந்துபிராமண கொடுமையினை எதிர்த்த வைகுண்டருக்கு இந்த பசவண்ணாவே முன்னோடி
ஆனால் அவரை பற்றி அதிகம் பேசமாட்டார்கள் ஏனென்றால் பசுவண்ணா பெயர் அரசியலுக்கு பயன்படாது.
மகா முக்கியமாக அவர் பிராமணர், இந்துமதத்தை மனமார ஏற்றவர் ஆனால் சில சடங்குகளை சாடினார், காவி சட்டையிலே சீர்திருத்தம் செய்தார்
அவரின் சீர்திருத்த திருமணத்தில் அய்யர் கிடையாது, மந்திரம் யாகம் எல்லாம் கிடையாது. சம்பிரதாயம் கிடையாது, ஆனால் தாலி உண்டு, அதுவும் மணமகனின் கழுத்தில் மணமகள் கட்ட வேண்டும்
மற்ற திருமணங்களில் தாலி கட்டியபின்புதான் கணவன் மனைவிக்கு அடிமை, ஆனால் அந்த திருமணத்தில் தாலி கட்டும்பொழுதே அடிமை
கன்னடத்தில் மிகசில இடங்களிலே இம்முறையில் திருமணம் நடக்கின்றது, மணமகன் கழுத்தில் தாலிகட்டி அவன் தன் கணவாக வர பிச்சை போட்டு மூன்று முடிச்சும் போடுவாள் மனைவி
உலகம் இதை வித்தியாசமாக நோக்க, அன்றே பசுவண்ணா இதை எல்லாம் செய்திருக்கின்றார் என்ற வரலாறும் வருகின்றது
அம்பேத்கர் என்பார்கள் இன்னும் பலரை புரட்சியாளர் என்பார்கள், உண்மையில் பிராமணராக பிறந்து பெரும் புரட்சி செய்த பசவண்ணாவே வரலாற்றில் மிகபெரும் எடுத்துகாட்டு
ஆனால் அவர் இந்துமத அபிமானி என்பதாலும், பிராமணர் என்பதாலும் மாற்றுமதங்களை தூக்கிபிடிக்கவில்லை என்பதாலும் அவரை கவனமாக மறைப்பார்கள்
பெண் விடுதலையினை அவளே தாலிகட்டும் உரிமைவரை கொடுத்த அந்த பசவண்ணா பெரும் போராளி என்பதில் சந்தேகமில்லை
சுவிஸ் ஈழதமிழர்களுக்கு பசுவண்ணா தெரியுமா இல்லையா என்பது தெரியாது, ஆனால் உலகில் இதை தொடங்கி வைத்தது அவர்தான்.
அடுத்தது என்ன?
Devi Somasundaram என்பவர் உடனே பசுவண்ணா இயக்கத்திற்கு மாறபோகின்றார், கிடைப்பவன் கழுத்தில் தாலியினை கதற கதற கட்ட போகின்றார்
அம்மணிக்கு இதற்கு முன் தாலிகட்டிய அனுபவம் இல்லாததால் சொல்கின்றோம், ஆண் வர்க்க வெறுப்பு பெண் விடுதலை என உணர்ச்சியில் பொங்கி தாலிகயிறால் அவன் கழுத்தை இறுக்கி கொன்றுவிட வேண்டாம், கொஞ்சம் கவனமாக கட்டவும்

