ஈழபோராட்டம் என அதன் வரலாற்றை நோக்கினால்
ஈழபோராட்டம் என அதன் வரலாற்றை நோக்கினால் ஆப்கானிஸ்தானில் கூட நடக்காத ரத்த கொடூரங்கள் எல்லாம் இங்கு நடந்திருக்கும்
அதில் விசித்திரம் என்னவென்றால் சிங்களனை விட தமிழ்புலிகளால் கொல்லபட்ட தமிழரே குறிப்பாக போராளி குழுவினரே அதிகம்
இலங்கையில் முதன் முதலில் ஆயுதம் தூக்கிய குழு டெலோ (Tamil Eelam Lebarate Organisation) குட்டிமணி தங்கதுரை ஜெகன் எல்லாம் அக்கோஷ்டியே
அங்கு 14 வயது சிறுவனாக வந்தவன் பிரபாகரன், துப்பாக்கியினை அவன் தொட்டுபார்த்ததே அங்குதான், அங்கு இருந்த இன்னொருவன் சபாரத்தினம்
இந்த சபாரத்தினம் என்பது ஈழபோராட்டத்தில் மகா முக்கியமான பெயர்
டெலோ 1976லே வெற்றிகரமாக இயங்கியது, தமிழருக்கு அதுதான் பாதுகாவலும் அடைக்கலமாகவும் இருந்தது, பிரபாகரன் அதில் டீ பாய்
இந்த டீ பாய் பிரபாகரனுக்கு அப்பொழுதே தலைவராகும் ஆசையும் பெரும் கொடுமையான வெறியும் இருந்தது, இந்த டெலோ அவனை தட்டி வைத்தது
அப்பொழுதே வெளியேறினான் பிரபாகரன், செட்டி தனபாலசிங்கம் என்பவனோடு கொள்ளையிட்டு அடிவாங்கியது அப்பொழுதுதான்
பின்னர் வேறுவழியின்றி டெலோ பக்கம் வந்தாலும் அவனுக்கு உள்ளூர வெறி இருந்தது, சபாரத்தினம் உட்பட பலருடன் அவனுக்கு மோதல் இருந்தது
இந்நிலையில்தான் ஒரு வங்கிகொள்ளை தொடர்பாக குட்டிமணி கோஷ்டி தமிழகத்துக்கு தப்பும் நிலையில் சிங்களனிடம் அகபட்டார்கள், அவ்வளவு நாளாக அகபடாதவர்கள் அன்று எப்படி அகபட்டார்கள்ள் என்பது சந்தேகமே
அவர்களை காட்டிகொடுத்தது பிரபாகரன் எனும் தகவல் அப்பொழுதே இருந்தது , வெலிக்கடை சிறையில் குட்டிமணி கோஷ்டி அடைக்கபட்டது
டெலோ அவர்களை மீட்கும் அதிரடி திட்டத்தை வகுத்தது, சபாரத்தினம் அதில் தீவிரமாக இருந்தார்
குட்டிமணி வெளிவந்தால் தன்னை தொலைத்துவிடுவார்கள் என அஞ்சிய பிரபாகரன் அவசரமாக திருநெல்வேலி தாக்குதலை நடத்தினான், அதில்தான் கொழும்பு கலவரமும் வெலிக்கடை படுகொலையும் நடந்தன
குட்டிமணி குழு அந்த கலவரத்தில்தான் மொத்தமாக சிறையிலே கொல்லபட்டது
தந்திரமாக ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தனர் புலிகள், இத்தாக்குதலில் புலிகளுடன் இருந்த செல்லகிளியும்காலி
அது இன்றுவரை மர்மமே
கொழும்பு கலவரத்துக்கு பின் இந்திய தலையீடு வந்தது, 4 குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளித்தது
டெலோவும் அதில் ஒன்று, ஆரம்பத்திலிருந்தே ஈழம் என்றால் நாங்கள் எனும் ஒரு மமதையில் இருந்த பிரபாகரனுக்கு சக இயக்கங்கள் மேல் வெறுப்பே இருந்தது
இந்தியா மிக சிறப்பான பயிற்சியினை வழங்கியது, ஒவ்வொரு குழுவுக்கும் தனி பயிற்சி, கடல்படை முறியடிப்பு கண்ணிவெடி, உளவு, தரைபடை, பீரங்கி என ஆளுக்கொரு ஸ்பெஷல் பயிற்சி கொடுத்தார்கள்
எல்லா பயிற்சியும் எங்களுக்கு மட்டுமே என கேட்ட பிரபாகரனை இந்திய தரப்பு தட்டி வைத்தது, அன்றே இந்திய படைக்கு நாள் குறித்தான் பிரபாகரன்
ஆனால் இந்தியாவுக்கு அஞ்சினான், காலம் பார்த்து பதுங்கி இருந்தான், பாம்புக்கு பால்வார்க்கின்றோம் என தெரியாமலே இந்தியாவும் பயிற்சி கொடுத்தது
இந்நிலையில்தான் இலங்கையில் ஈழபோராளிகள் கை ஓங்கியது, சபாரத்தினத்தின் அதிரடியும் கொஞ்சமல்ல
அப்பொழுது இலங்கையில் ஒரு சமநிலை நிலவியது இலங்கை ஆர்மியினை 4 குழுக்களும் அட்டகாசமாக சமாளித்தன அல்லது தொல்லை கொடுத்தன
இதனால் சிங்கத்தினை 4 எருதுகள் சூழ்ந்த கதையாக ராணுவம் திணறியது, பத்மநாபா, பாலகுமாரன், சபாரத்தினம், பிரபாகரன் என 4 போராளிதலைவர் இருந்தனர்
அப்பொழுது பத்மநாபா கம்யூனிஸ்ட் என அறியபட சபாரத்தினமும் பிரபாகரனும் ஹீரோக்களாக திகழ்ந்தனர்
தமிழகத்தில் ராமசந்திரன் பிரபாகரனை அணைத்து கொள்ள கலைஞர் மற்ற மூவரையும் அணைத்தார்
சும்மாவே சபாரத்தினம் மேல் கடும் கோபத்தில் இருந்த பிரபாகரனை தூண்டிவிட்டது ராமசந்திரன் “சபாரத்தினம் உனக்கு எதிரியாக இருப்பான் அவனை கவனித்துகொள்”
இலங்கையில் சபாரத்தினம் வளர்வதும் அவன் கலைஞரிடம் நெருங்குவதும் அவருக்கு ஏதோ பொறிதட்டிற்று
அன்றிலிருந்து பிரபாகரனுக்கு வெறி உச்சத்திற்கு ஏறியது, சபாரத்தினம் இந்தியாவோடு சேர்ந்து தன்னை அழிக்க சதிசெய்ததாக புலம்பினான்
திம்பு மாநாட்டில் இந்தியா புலிகளும் ஒரு இயக்கமே எனும் அளவில் பேச, இல்லை நாங்கள் மக்களின் ஒரே பிரதிநிதி என புலிகள் அடம்பிடிக்க சர்ச்சை வளர்ந்தது
மற்ற இயக்கங்கள் மேல் பிரபாகரன் கடும் அணல் கக்கியது அப்பொழுதுதான்
இன்னொரு விஷயம் அவனுக்கு தோதானது, அதாவது சபாரத்தினம் இயக்கம் தாழ்த்தபட்ட தமிழரின் இயக்கமாக அது அறியபட்டது
அதாவது தாழ்ந்தசாதி போராளி அதிகம்
யாழ்பாண உயர்வர்க்கம் இதை சாதி அடிப்படையில் பார்த்தது “பள்ளு பறையள் எல்லாம் துப்பாக்கி எடுத்து நியாயம் பேசுதுகள், இப்பவே தட்டி வைக்கோணும்” என பகிரங்கமாகவே சொல்ல தொடங்கினர்
யாழ்பாண மேல்வர்கத்து ஆசையினை நிறைவேற்ற ஒரு அசுபநாளில் அறிவித்தான் பிரபாகரன்
இனி எங்களை தவிர எல்லா இயக்கமும் தடை செய்யபடுகின்றது, அவர்களை பிடித்து ஆயுதம் களைவித்து கொன்றான் பிரபாகரன்
அக்கொடுமை ஹிட்லர் காலத்து கொடுமை, நெஞ்சை பிடித்துகொண்டு படியுங்கள்
டெலோ இயக்கத்து உறுப்பினர்களை கொன்று யாழ்பாண வீதிகளில் எரித்தனர் புலிகள், அதுவும் கிட்டதட்ட 800 போராளிகளை
ஆம் பயிற்சியும் அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் கொண்ட
வீரர்கள் தாழ்த்தபட்டோராயும் சபாரத்தினத்தின் கோஷ்டியில் இருந்ததற்காகவும் கொல்லபட்டனர்
அதைவிட கொடுமை புலிகள் அவர்களை கொன்று டயர் போட்டு எரிக்கும்பொழுது புலிகளுக்கு டீயும் சோடாவும் கொடுத்து உற்சாகபடுத்தியது யாழ்பாணத்து சாதிவெறி மக்கள்
அந்த டெலோ ஒழிப்பை ஹிட்லரின் யூத ஒழிப்பு போல ரசித்து செய்தான் பிரபாகரன்
யாரும் அப்பொழுது தடுக்கவில்லை, இந்திய அமைதிபடை அப்பொழுது அங்கு இல்லை, பத்மநாபா மட்டும் ஓரளவு போராளிகளை வைக்கோல் லாரியிலும் இன்னும் பல தந்திரங்களிலும் காப்பாற்றினார்
இறுதியில் ஒரு புகையிலை காட்டில் மறைந்திருந்த சபாரத்தினத்தை சுற்றினர் புலிகள்
சரணடைவதற்காக வந்த அவரை சுட்டு கொன்றான் கிட்டு
சக தமிழ் போராளியினை ஒழித்ததை மாபெரும் வெற்றியாக கொண்டாடியது புலிகூட்டம்
அக்கூட்டத்தில் ஆர்பரித்தவன் அந்த திலீபன், உண்ணாவிரதம் இருந்து செத்தானே அவன்
அவர்கள் துரோகிகளை களையெடுத்துவிட்டதாக அறிவித்து கொண்டிருக்கும் பொழுது சிங்களதரப்பு மகிழந்தது, ஆம் அவர்கள் எதிர்கோஷ்டி ஒன்று ஒழிந்தது
நாம் செய்யவேண்டிய வேலையினை புலிகளே செய்கின்றனர் என தேநீர் குடித்தபடி சிரித்தான் ஜெயவர்த்தனே
டெல்லி புலிகளின் எதிர்பாரா அடியில் ஆடிகிடந்தது, ஒரே ஒரு குரல் மட்டும் அந்த கொடிய காலங்களில் புலிகளிடம் கெஞ்சி கொண்டிருந்தது
அக்குரலுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி
“தயவு செய்து சக போராளிகளை கொல்லாதீர்கள், உங்கள் மூத்தவனாக தம்பிகளை கோருகின்றேன்” என அவர் எவ்வளவோ சொல்லியும் புலிகள் கேட்கவில்லை
அவர் கதறினார், உருகினார், மருகினார் புலிகளிடம் எவ்வளவோ கெஞ்சினார்
சபாரத்தினத்தை விட்டுவிடுங்கள் என மனதார உருகி உருகி கேட்டார்
அதை ராமசந்திரன் ஓரகண்ணால் ரசித்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை, நிச்சயமாக சொல்லலாம் ராமசந்திரன் நினைத்தால் சபாரத்தினத்தை காத்திருக்க முடியும்
ஆனால் ஏனோ செய்யவில்லை
அந்த சபாரத்தினம் கொடூரமாக கொல்லபட்டான்,
இதே மே 7
இதன் பின்பே டெசோ இனி இயங்காது என அறிவித்தார் கலைஞர், வாஜ்பாய் பருக் அப்துல்லா உட்பட்ட தலைவர்கள் எல்லாம் ஈழத்தை கைகழுவியது இதனால்தான்
ஏன் சபாரத்தினம் மேல் இப்படி பிரபாகரனுக்க்கு ஒரு வெறுப்பு?
பின்னாளில் இந்திய ராஜதந்திரி ஒருவர் ஆவணபடுத்தபடாத பேச்சு ஒன்றில் சொன்னார், சபாரத்தினம் அடிக்கடி சொல்லிய முழக்கமே அவர் சாவுக்கு காரணம் என்றார்
என்ன முழக்கம்?
“இந்தியாவினை தவிர ஒரு நாடும் ஈழதமிழர் பிரச்சினையினை தீர்க்கமுடியாது, இங்கு தமிழர் நிம்மதியாக வாழ இந்தியா எனும் நம் அண்டைநாடே நமக்கு அடைக்கலமும் பாதுகாப்பும்
இந்தியாவின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்” என்பார் சபாரத்தினம்
இதற்காகத்தான், ஆம் இந்தியாவோடு இணைந்து செயல்பட்டான் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமாக கொல்லபட்டான் சபாரத்தினம்
அவனோடு கிட்டதட்ட ஆயிரம் போராளிகளும் மகா கோரமாக கொல்லபட்டனர்
இத்தோடு விட்டானா பிரபாகரன்? பத்மநாபாவுக்கும் அதே அடி சென்னையில் அதே கொலை
இந்திய அமைதிபடை, ராஜிவ் கொலை என ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான்
கடைசியில் முள்ளிவாய்க்காலில் மல்லாக்க கிடந்தான்
புலிகளின் அழிவுக்கும் ஈழ அழிவுக்கும் ஒரே காரணம் பிரபாகரன்
நிச்சயம் தன் போராட்டத்திற்கு சக துணையாக இருக்கும் பல குழுக்களை அறிவுள்ள தலைவன் அழிக்கவே மாட்டான்
ஆம் சிங்களன் தன்னை தாக்கும்பொழுது அவனே காக்க வருவான், அவனை நாம் காக்க செல்வோம் எனும் நுட்பமான தந்திரம் அது
பலநாட்டு போராளிகுழுக்கள் செய்யும் காரியம் அது
ஆனால் அறிவு கெட்டவனும், தான் எனும் அகந்தையும் இலங்கையே தனக்கு அடிமை என நினைத்தவனுமான பிரபாகரனுக்கு இதெல்லாம் புரியவில்லை
நண்பன், பகைவன், எதிரி, என கண்ணில் பட்டவனை எல்லாம் கொன்றுகொண்டே அவனும் செத்தான்
தமிழீழத்திற்காக இளம் வயதிலே போராட வந்தவனும், இந்தியாவினை நிரம்ப நேசித்தவனும், சக தமிழனால் கொல்லபட்டவனுமான அந்த பரிதாபத்திற்குரிய சபாரத்தினத்திற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அவன் சாக முதல் காரணம் புலிபாசிசம் என்றாலும் இன்னொரு பெரும் காரணம் யாழ்பாண சாதிவெறி
ஆம் புலிகள் அழிந்திருக்கலாம் ஆனால் அந்த சாதிவெறி அழிவது போல் தெரியவே இல்லை
