ஈழ தமிழர் போராட்டத்தை சொல்லும் 18.5.2009 படம் வெளிவந்தாயிற்று

ஈழ தமிழர் போராட்டத்தை சொல்லும் 18.5.2009 படம் வெளிவந்தாயிற்று, சத்தியராஜ் போன்றவர்கள் இப்பொழுதே படத்திற்கு விளம்பரம் தேடியாயிற்று

எல்லா முள்ளிவாய்க்கால் கடைசி நிமிடங்களையும் துணிச்சலாக காட்டி இருக்கின்றார்களாம்

ஆனால் இறுதி யுத்தத்தை நிறுத்த இந்தியா வைத்த கோரிக்கைகள், புலிகள் ஆயுத ஒப்படைப்பு செய்துவிட்டு 1987ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்க வெண்டும் என்ற நிலைப்பாடு பற்றி எல்லாம் படம் நிச்சயம் பேசாது

உலகிலே ஒரே முறை விசித்திரமாக இந்திய ராணுவம் புலிகளோடு மோதியபொழுது, இந்தியாவில் புலிகள் சிகிச்சை எடுத்த கதை எல்லாம் பேசாது.

அச்சம்பவம் விசித்திரமானது, கேலி கூத்தானது. புலிகள் இந்திய ராணுவவீரர்களை கொன்று அனுப்பிகொண்டே, இன்னொருபக்கம் இந்தியாவின் மதுரையில் காயத்திற்கு சிகிச்சைக்கும் வந்தார்கள்

மண்டியிடாத மானம் அப்படி இருந்திருக்கின்றது

1987க்கு முன் ஈழமக்களுக்கு ஆதரவான இந்தியா, 1990ல் கூட ஆதரவாய் நின்ற தமிழகம், ஏன் 1991க்கு பின் பின்வாங்கியது என்பது பற்றி எல்லாம் படம் பேசாது.

இதனை எல்லாம் அப்படம் நிச்சயம் பேசாது.

ஒருபக்கம் சார்ந்தே எடுக்கபட்ட படம் வசூலை குறி வைத்தே அன்றி வேறல்ல‌

படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கின்றாராம்

பெரியார் படத்திற்கு இசை அமைக்கமாட்டேன் என மறுத்தவர், தன் தேசத்தினை அவமதித்த ஒரு போராட்டம் என சொல்லபட கூடிய அந்நியநாட்டு ஆயுத கும்பலுக்கு ஆதரவாக இசை அமைத்திருப்பது கவனிக்கதக்கது

ஆக ஈழதமிழரின் ரத்ததில் எவ்வளவு நாள்தான் அரசியல்வாதிகளும், திடீர் குபிர் போராளிகளும் காசு பார்ப்பார்கள்

சினிமாக்காரர்களுக்கும் காசு பார்க்கும் ஆசை வராதா? வந்தே விட்டது

அதில் இளையராஜாவும் விதிவிலக்கு அல்ல‌