உங்களுக்கெல்லாம் கோடி நன்றிகள்
நம்மை பின் தொடர்ந்து வருபவர்களுக்கெல்லாம் நன்றி. நாம் பெரும் பிரபலம் அல்ல, நடிகனும் அல்ல, அழகனும் அல்ல, பெண் ஐடியும் அல்ல
ஆயினும் ஏதோ எழுதுகின்றான் என இவ்வளவு பேர் வருகின்றீர்கள் உங்களுக்கெல்லாம் கோடி நன்றிகள்
எனினும் இரு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றோம், இங்கு குறுகிய நோக்கம் என எதுவுமே இல்லை, மாநிலம் சாதி மதம் இனம் மொழி வட்டம் என குறுகிய எல்லையில் இருப்பவர்கள் தயவு செய்து அகன்றுவிடுங்கள்
தேசத்தின் நலனையும் உலக நிலவரத்தையும் சொல்லும் இடம் இது, பரபரப்பான செய்திகள் வரலாறு இன்னபிற காலத்தை வென்ற ரசனைகள் என வேறுமாதிரியான பக்கம் இது
தயவு செய்து நரம்பு புடைத்து கொண்டு புரட்சி, சீரியஸ், போராளி முகமூடி இப்படி சுற்றும் கொஷ்டிகளும் சென்றுவிடுங்கள்
இது வெறும் டிஜிட்டல் பூங்கா,, இங்கு ரசிக்கவும் விளையாடவும் சுற்றி காட்டவும், திண்ணையில் அமர்ந்து கதை பேசி மகிழவும் சிரிக்கவுமே முடியும் மாறாக பெரும் புரட்சி மண்ணாங்கட்டி எல்லாம் சாத்தியமில்லை, அதனால் வந்தீர்களா சிரிதீர்களா என சென்றுவிடுங்கள்
இன்னொன்று பல ஆண்டுகளாக இங்கு இருக்கும் நண்பர்கள் ஏராளம், புதிதாக வருபவர்களுக்கு அவர்களை தெரிய நியாமில்லை
பொதுவாக ஒன்றை எழுதிவிட்டு நகர்ந்துவிடுவது வழக்கம், அதிலே இருப்பதில்லை அதற்கு அவசியமுமில்லை
ஆனால் கமெண்டுக்கு வரும் கமாண்டோக்கள் அதி தீவிர தாக்குதலில் யாரையெல்லாமொ காயபடுத்துகின்றார்கள்
அவர்கள் சொன்னபின் நாம் சென்று பார்க்கும்பொழுது புதியவர்கள் இம்சை தாளவில்ல்லை, அதெல்லாம் சரியல்ல
ஆக கமெண்ட் பாக்ஸ் காமாண்டோக்கள் கமெண்டில் ஏதும் சுட்டு சாகசம் செய்யவேண்டுமென்றால் எம்மை சுடுங்கள்
மாறாக நண்பர் என்ற மகா உரிமையில் எழுதும் பழைய நண்பர்களை சுடாதீர்கள், அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை
நன்மை மட்டுமே தேடுவோம், நல்ல நண்பர்களை தேடுவோம்
இங்கு நண்பர் உண்டு பகைவர் இல்லை, அப்படி இருக்கவும் கூடாது என்பதுதான் எம் விருப்பம்
யாரையும் பகைக்கவோ காயபடுத்தவோ விரும்பவில்லை, சொல்வதை சொல்ல்விட்டோம் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என நம்புகின்றோம்