உங்கள் கதி என்னாகும் என்பதற்கு ஈழமே சாட்சி
பாலஸ்தீனம் கதறி பார்த்தது அழுது பார்த்தது ரத்தம் சிந்தி பார்த்தது ஏன் பெண்கள் அட குழந்தைகள் கூட இண்டிபாதா என வந்து கையெடுத்து வணங்கி நின்றது
கலங்கா கண்களும் கலங்கின, ஆனால் இந்த உலகில் அவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது?
திபெத்துக்கு என்னாயிற்று?
அட திபெத் என்ன? வளமான ஹாங்காங் 4 மாதமாக திமிறி நிற்கின்றது பெரும் ஆர்ப்பாட்டம் ஆனால் என்னாயிற்று
2009ல் ஈழத்தில் என்னாயிற்று, இன்றுவரைதான் என்னாயிற்று?
உலக நீதி என்பது அதுதான்
அவனவன் அழுகையினை அவனவனே துடைக்க வேண்டும், யாரும் வந்து துடைக்கமாட்டார்கள்
ஒன்று பெட்ரோல் போல இருப்பதை சுரண்ட வருவார்கள் இல்லை அண்டைநாட்டை கொம்பு சீவ வருவார்கள் அதுவுமில்லை என்றால் ஆப்கன் சிரியா போல ஆயுதங்களை சோதிக்க வருவார்கள்
ஒன்றுமே இல்லா மக்களை நோக்கி எவனும் வரமாட்டான் தெய்வமும் வராது
இது மானிட அநீதி எனினும் கொடும் உலகில் அதுவே நீதி
காஷ்மிரிகள் இந்தியாவில் கலந்து வாழ்வதே அவர்களுக்கும் நல்லது இந்தியாவுக்கும் நல்லது
மற்றபடி வைகோ சொல்வது போல் அது உலக சிக்கல் ஆகாது, அப்படி ஆனாலும் வைகோ திராவிட கும்பலால் ஈழ சிக்கல் திசைமாறி சென்று பெரும் அழிவு ஏற்பட்டு முடிந்தது போலத்தான் முடியும்
ஏ காஷ்மீரிகளே
யார் பேச்சையும் கேளுங்கள் ஆனால் திராவிட தமிழ்தேசிய அழிச்சாட்டிய கோஷ்டிகளை நம்பினால் உங்கள் கதி என்னாகும் என்பதற்கு ஈழமே சாட்சி