உடல்பிறப்பே

உடல்பிறப்பே

இங்கே என் எதிரே அமர்ந்துக்கொண்டு அன்பு நண்பர் ராமசந்திரனும் , அம்மையார் ஜெயலலிதாவும் கேட்கும் கேள்வி கனைகளை பார், அதை கேட்டு காமராஜர் நகைப்பதை பார், ராஜாஜி சிரிப்பதை பார்

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே, தஞ்சை கோவிலில் என்ன நடந்தால் என்ன? உங்கள் மகன் செல்வாரா? விபூதி வைப்பாரா?

தேவர் சமாதிக்கு செல்லும் உங்கள் மகன் பெருவுடையார் கோவிலுக்கு ஏன் செல்லவில்லை? ஆக தமிழனின் வரலாறு தேவர் சமாதியிலா இருக்கின்றது?

திருவாரூர் கோவிலுக்கே தமிழில் குட்முழுக்கு நடத்தாத நீங்கள் தஞ்சாவூர் கோவிலுக்கு தமிழில் மல்லு கட்டுவது ஏன்?

தஞ்சாவூர் கோவில் சிலைகள் காணாமல் சென்றபொழுது நீங்களும் உங்கள் மகனும் என்ன செய்தீர்கள்?

சிலையினை கொண்டுவந்த மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு கூட உங்கள் உத்தம புத்திரன் வாய்திறக்காதது ஏன்?

சமீபத்தில் திருமா ஆலய கோபுரம் பற்றி மகா மட்டமாக பேசியபொழுது உங்கள் உடல்பிறப்பு அமைதிகாத்தது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

இப்படி எல்லாம் கேட்டு குத்தீட்டியால் என்னை குத்திவிட்டு, சம்மட்டியால் அடுத்த அடி அடிக்கின்றார்கள்

ஆம், அந்த சோற்றுபிண்டம் வீரமணி அருமை கண்மணி ரஜினிக்கு சவால்விடுகின்றாராம்

அந்த சவாலில் அந்த பிண்டம் ஏதும் வம்பிழுத்து அது நம் தலையில் பாறாங்கல்லாய் விழுவதை அனுமதிக்க போகின்றான் உன் செல்வமகன் என்கின்றார்கள்

அடுக்குமா? தாங்குமா? முடியுமா?

எல்லாம் அசுரன் படம் பார்த்துவிட்டு நீனே கிளப்பிய அந்த மூலபத்திரத்தால் வந்த சிக்கல்

அசுர குலம் திராவிட குலம் என அரசியல் செய்வதைவிட்டுவிட்டு அசுரன் படம் பார்த்து டிவிட் போட்டு இப்படியா சிக்குவாய்?

ஜொலிக்காத கூழாங்கல்லா நீ?

தமிழில் மந்திரம் சொல்லட்டும் ஆனால் உன் மகனே சொல்லவேண்டும் என அவர்கள் என் நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டுமளவு இடம் கொடுத்துவிட்டாய் நீ

தஞ்சை கோவிலை மறப்பாய், வீரமணியினை துறத்துவாய் அதன் பின் உருப்படுவாய்

இல்லையேல் உன் அருகே அமர்ந்திருக்கும் வைகோ போல் ஆகிவிடுவாய்

தம்பி வைகோ, என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தை நினைவிருக்கின்றது, “அண்ணா,ஸ்டாலின் கரங்களை நான் வலுபடுத்துவேன்” என அழுதுகொண்டே சொன்னான்

ஆம், அழும் வைகோ ஆபத்தானவன் என்பது அன்றே நான் கண்ட அனுபவம்

கழகம் வாகை சூட, கண்மணி உதயநிதி முடிசூட முதலில் வைகோவினை விரட்டுவாய், வீரமணியினை அகற்றுவாய், திருமாவளவனை தெருவில் விடுவாய். இங்கே என்னை கேள்விகளால் துளைக்கும் இவர்கள் வாயினையும் மூடுவாய்