உண்ணாவிரத மேடையில் ராமசந்திரனின் கொள்கை விளக்க பாடல்கள்
அதிமுக உண்ணாவிரத மேடையில் ராமசந்திரனின் கொள்கை விளக்க பாடலை ஒலிபரப்பினார்களாம்
அது என்ன தமிழ்நாட்டு அரசு பாடலா? ஆனாலும் முதல்வர் இருந்த மேடையில் ராமசந்திரனின் கொள்கை பாடல்கள் ஒலித்தன
திடீரென துள்ளுவதோ இளமை, நாணமோ இன்னும் நாணமோ போன்ற உலக தத்துவ பாடல்களும் ஒலியேறியதாம்
அந்த மேடையில் பழனிச்சாமி பக்கம் கோகுல இந்திரா இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது
எல்லா தத்துவ பாடல்களையும் ஒலிபரப்பிவிட்டு, கோகுல இந்திரா இருந்த மேடையில் “அழகிய தமிழ் மகள் இவள்” பாடலை ஏன் விட்டுவிட்டார்கள் என தெரியவில்லை

அம்மா உணவகம் மூடிபட்டுவிட்டது என செய்தி வந்தது, ஆனால் அது உண்ணாவிரத பந்தலுக்கு மாற்றபட்டது என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது
நல்லா தின்னுபுட்டு,ராமசந்திரன் பாட்டை கேட்டுட்டு காலாட்டிட்டு இருப்பது போராட்டமாம்
இதற்கு பதில் எங்களுக்கு போராட தெரியாது, பழக்கமே இல்லை என சொல்லிவிட்டு ஓடியிருக்கலாம்