உண்மையாக இருந்தால் நல்லது
மலேஷியாவிலும் திராவிட கழகம் உண்டு, அவர்களுக்கு இயக்கமும் அலுவலகமும் உண்டு, இப்பொழுது ரப்பர் ஸ்டாம்பு இயக்கமாக இருக்கின்றது
அன்று தமிழ்நாட்டில் இல்லாத திராவிடம் பேசினார்கள், பார்ப்பானிய ஆதிக்கம் என்றார்கள் இன விடுதலை தன் மானம் என என்னென்னவோ பேசினார்கள்
மலேஷியா வெள்ளையன் தமிழர்களை கூலிக்கு அழைத்து வந்த பூமி. இங்கு அவர்கள் உழைக்கவே வந்தார்கள், வந்த இடத்தில் வெள்ளையன் அவர்களுக்கு வேலை கொடுத்து தானும் வாழ்ந்தான் அவர்களை வாழவும் வைத்தான்
அங்கு ஏன் திராவிட கழகம்? எந்த பிராமணன் அவர்களை அங்கே அடிமைபடுத்தி வைத்தான்?
மலேஷிய தமிழரிடம் ஏன் கருப்பு சட்டையும் இம்சையும்
அன்று மலேஷிய அதிகாரம் பிரிட்டிஷாரிடம் இருந்தது, இன்று அருமையான மக்களாட்சி நடக்கின்றது , பிராமணியமோ இதர குற்றசாட்டோ இல்லை
பின் ஏன் திராவிட கழகம்? அதற்கொரு கூட்டம், அதற்கு இவரின் வருகை?
அவசியமே இல்லா விஷயம், வீண் குழப்பம் விளைவிக்கும் செயல்
வீரமணி சிங்கப்பூரை தொடர்ந்து மலேஷியா வரவும் தடை என செய்திகள் சுற்றுகின்றன, அது உண்மையாக இருந்தால் நல்லது
மூவினங்களும் மகா ஒற்றுமையுடன் அவரவர் மதத்தை மதித்து மகா நல்வாழ்வினை மகிழ்வுடன் வாழும் நாட்டில் கடவுள் இல்லை என சொல்லிகொண்டு இவர்கள் வர என்ன அவசியம்?