உண்மையான சுவாரஸ்யம் சசிகலா கதையில்தான் இருக்கின்றது

ஜெயலலிதா வாழ்க்கை பற்றி பல படங்கள் வருகின்றன‌

ஜெயாவின் வாழ்க்கையினை விட மகா சுவாரஸ்யமானது சசிகலாவின் வாழ்க்கை, ஒரு கிராமத்து சாமான்ய பெண் ஜெயாவினை ஆட்டிவைத்து, மயிரிழையில் முதல்வர் ஆட்சியினை தவறவிட்டது நிச்சயம் பெரும் சுவாரஸ்யமான விஷயம்

ஜெயாவின் பார்த்திரத்தில் ஒரு மேக் அப் பொம்மையினை நடிக்க வைக்கலாம், ஆனால் சசிகலா எனும் மகா அழுத்தமான பாத்திரம் பெரும் சவாலானது

ஒரு வேளை மகா திறமையான நடிகை இல்லை என்றுதான் சசிகலா வாழ்க்கையினை படமாக்கவில்லையோ என்னமோ?

எனினும் விஷயம் இதுதான்

ஜெயா கதை எப்படி இருந்தாலும் யாரும் ஏனென்று கேட்க போவதில்லை, ஆனால் சசிகலாவுக்கு பெரும் சாதிய பின்புலமும் இன்னும் வலுவான குடும்ப அமைப்பும் உண்டு

சசிகலா படத்தை எடுப்பதே சிரமம் அதை வெளியிடுவது அதைவிட சிரமம்

ஆனால் சவால் எடுத்து மகா திறமையான நயன் அல்லது ஜோதிகா போன்றோரை நடிக்கவைத்தால் படம் சூப்பர்ஹிட் என்பது உறுதி.

உண்மையான சுவாரஸ்யம் சசிகலா கதையில்தான் இருக்கின்றது.,