உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை

ஒரு விஷயம் நினைவில் கொள்ளுங்கள், இங்கு உண்மையான தமிழின தலைவன் என எவனுமில்லை அப்படி ஒருவன் வரவும் முடியாது

பிரபாகரன் அவசரத்தில் துப்பாக்கி எடுத்தவன் அதை கீழே வைக்க அஞ்சினான், நாடு அடைந்து தான் ஒரு அரசனாக முடிசூடினால் மட்டுமே தனக்கு பாதுகாப்பு என நம்பினான்

அது சாத்தியமாகா பட்சத்தில் ஓடினான் ஓடினான் சிங்களனை மிரட்டினான் இந்தியாவினை மிரட்டினான், ஒன்றும் நடக்கவில்லை. அவன் ஈழமக்களுக்காக போராடினால் முள்ளிவாய்க்காலை நடக்கவிட்டிருக்க மாட்டான் மாறாக அவன் உயிருக்காக போராடினான் பெரும் அழிவினை நிகழ்த்தினான் அவனும் அழிந்தான்

அவனை போராளி என்றோ தமிழின தலைவன் என்றோ உலகம் ஒரு போதும் ஏற்கவில்லை

கஸ்ட்ரோவும் அராபத்தும் அவனை நாயினும் கீழாக மதித்தார்கள் ஒரு ரவுடி பட்டியலிலே வைத்திருந்தார்கள்

பிரபாகரனை மதித்த ஒரு சர்வதேச புரட்சியாளனை காட்டுங்கள், அவனிடம் நியாயம் உண்டு அவன் உண்மை போராளி என ஒப்புகொண்ட ஒரு தலைவனை காட்டுங்கள்?

வடகொரிய தலைவனை ஏற்றுகொண்ட சீனா கூட பிரபாகரன் தொட ஆகாதவன் என ஒதுக்கியது, இந்திய எதிரி என்ற வகையில் பாகிஸ்தான் கூட அவனை தொடவில்லை

அவனை மதித்த ஒரே தலைவன் ராஜிவ்காந்தி அதற்கான விலை அவரின் உயிர், கடைசியில் பேசிபார்த்துவிட்டு நாசமாய் போ என சென்றவன் நார்வே தூதன்

மற்றபடி லண்டனில் பால்சிங்கம் இருந்ததெல்லாம் சர்வதேச‌ அரசியல் ,நாளையே திருமுருகன் காந்தி குண்டு வைத்துவிட்டு தப்பினாலும் லண்டன் அடைக்கலம் கொடுக்கும் அதன் நிலைப்பாடு அப்படி

ஆக உலகமே ஒதுக்கி வைத்த ஒரு ரவுடிதான் பிரபாகரன்

சரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் உண்மையான தமிழின தலைவன் இருந்தானா? இல்லை

பெரியாரும் அண்ணாவும் பிரிட்டானிய கைகூலிகள் அவன் சென்றபின் பாட்டை மாற்றிபாடி டெல்லிக்கு அடங்கினார்கள்

அண்ணா திராவிட நாடு கோரிக்கையினையே கைவிட்டார்

கருணாநிதியின் பல்டி உலகறிந்தது, ராமசந்திரனும் ஜெயாவும் புரிந்துகொள்ள சிரமாமனவர்கள் அல்ல‌

ஆனால் கருணாநிதியினை எதிர்த்துமட்டும் அரசியல் செய்தவர்கள்

ஆம் கருணாநிதி டெல்லியினை எதிர்ப்பார் இவர்கள் அவரை எதிர்ப்பார்கள் ஆட்சிக்கு வருவார்கள்

இதனால் உறுதியாக சொல்கின்றோம், தமிழின தலைவன் என எவனுமில்ல்லை பிரபாகரன் சந்தன கடத்தல் வீரப்பன் ரகம்

இங்கிருப்பவர் எல்லாம் வாக்கு அரசியல் நாளையே 4 வாக்கு கிடைக்குமாயின் மலையாளி தலைவன், தெலுங்கர் தலைவன், அந்தமான் பழங்குடியினர் தலைவன் என இவர்கள் வேஷம் கட்ட ரெடி

தமிழின தலைவன் என்பது அவர்கள் பிழைப்புக்கான தலைப்பு அன்றி வேறல்ல‌

இதை உணர்ந்து தமிழர் அவரவர் பிழைப்பினை பார்ப்பது நலம்

இந்திய அரசியல்வாதிகள் ஏன் வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்கமாட்டார்கள் என்றால் இதற்காகத்தான்

அவனவனுக்கு ஒழுங்காக வேலை இருக்கும் பட்சத்தில் அரசியல் கூட்டம் , பேனர், பிரியாணி கூட்டம் இதற்கெல்லாம் ஆள் வராது, ஒழுங்காக நாடு அமைதியாய் இயங்கும்

வேலை இல்லா கும்பலே இவர்களுக்கு பலம்

அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க கட்சி நடத்துகின்றார்கள் இதற்கு வேறு வேலைவாய்ப்பு இல்லாதது அவர்களுக்கு அவசியமாகின்றது

இதனால் வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும் வரை அரசியல்வாதியும் அவனின் கட்சியும் தமிழின தலைவன் போன்ற பட்டங்களும் இருக்கும், அது இந்தியாவின் தலைவிதி