உண்மை இருக்கும் இடத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும், ஒரு உறுதி இருக்கும்
உண்மை இருக்கும் இடத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும், ஒரு உறுதி இருக்கும்
அது காமராஜரிடம் இருந்தது, இந்திராவிடம் இருந்தது இப்பொழுது நிர்மலா சீத்தாரமனிடமும் இருக்கின்றது, அதுதான் ஆணவம் என்றால் அது ஆணவமாகவே இருக்கட்டும்
பொய் இருக்குமிடமெல்லாம் ஒரு கள்ளதனம் இருக்கும், யார் காலிலும் கூச்சபடாமல் விழும் நடிப்பு இருக்கும், மானம் வெட்கம் இன்றி யாரிடமும் கூட்டணி சேரும் ஒருவித திருட்டுதனம் இருக்கும், பசப்பு வார்த்தைகள் இருக்கும்
அவர்களுக்கு தன் நலமும் தன் வருங்கால இருப்புமே முக்கியம், வேறு எதுபற்றியும் கவலை இல்லை, பொய்யும் நடிப்பும் அவர்களின் தொழில் மூலதனம். இதனால் சிரித்து நடித்து சாகசம் செய்து, பாசாங்கு செய்து பல நாடகம் நடத்துவார்கள்
அதற்கு அன்றைய அண்ணா, கருணாநிதி முதல் இன்றைய பன்னீர்செல்வம் வரை ஏகபட்ட உதாரணம் காட்டமுடியும், இவர்கள் எல்லாம் உத்தமர்கள், ஏழை பங்காளிகள், மக்களின் கண்ணீர் தீர்க்க வந்த அவதாரங்கள் என நம்பினால் நம்புங்கள்
நடிப்பில் ஏமாறுவது தமிழனுக்கு புதிதா என்ன?