உத்திரபிரதேசம்
வற்றாத ஆறு ஓடும் மாநிலம் உத்திரபிரதேசம், அதன் மண்ணும் வளமையானது
அங்கு விவசாயத்துக்கு குறைவில்லை, ஆடுமாடுகளுக்கும் குறைவே இல்லை
அட மாடுகளின் பாதுகாப்புக்கும் கொஞ்சமும் குறைவே இல்லை
உலகின் மிக பிரமாண்டமான ஆறுகளில் ஒன்றான கங்கா ஓடும் பூமி அது, தமிழக நீர் ஆதாரத்தை விட ஆயிரம் மடங்கு பெரிய வளம் கொண்ட இடம் அது
அதன் மண்ணும் மகா செழிப்பானது, பல்லாயிம் ஏன் பல லட்சம் வருடங்களாக விவசாயம் மற்றும் ஆடுமாடு வளர்ப்புக்கு பெயர் பெற்ற பூமி அது
பகவான் கண்ணன் முதல் மொகலாய மன்னர் வரை வந்து அமர்ந்த செழிப்பான பூமி அது
ஆனால் அந்த செழுமையான மாநிலம் பின் தங்கியிருக்க ஒரே காரணம் போதிய கல்வி இல்லை, விழிப்புணர்வு இல்லை, பெரும் பொருளாதார திட்டம் இல்லை
குறிப்பாக கடல் துறைமுகங்கள் அங்கு இல்லை
இப்படி ஏகபட்ட இல்லை உண்டெனினும் மகா முக்கியமான காரணம் அவர்களிடம் சிந்தனை குறைவு, கல்வி குறைவு
ஆக மிக செழிப்பான பூமியாயினும் விவசாயம் ஆடுமாடு மேய்த்தல் என்றால் என்னாகும் என்பதற்கு உபி கண் கண்ட உதாரணம்
வறண்ட ராஜஸ்தானில் இருக்கும் சில விஷயம் கூட விவசாயமும் ஆடுமாடும் செழிக்கும் உபியில் இல்லை என்பதுதான் சோகம்..
இந்தியா என்ன உலகம் முழுக்க சுற்றிபாருங்கள், விவசாயம் ஆடுமாடு வளர்ப்பு எல்லாம் முழு தொழிலாக கொண்ட எதுவும் உருப்படவே இல்லை
இந்த யதார்தத்தை புரிந்து கொண்ட இனம் வாழ்கின்றது..
இங்கோ வறண்ட தமிழகத்தையும் விவசாயம் அரசு தொழில், ஆடுமாடு மேய்த்தல் அரசு தொழில் என ஒரு அரைகிறுக்கனும் அவன் கோஷ்டியும் சொல்லிகொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
தமிழகத்தை உபியினை விட பின் தங்கிய மாநிலம் ஆக்குவோம் என்பதை விட என்ன அர்த்தம் இருக்க முடியும்?