உனக்கு இருக்குடா ஒருநாளு

அமெரிக்காவின் தடைகள் ஈரானில் அட்டகாசமாக வேலை செய்கின்றது, பசி பட்டினி மற்றும் இதர கொடுமைகளை கெடுபிடிகளை தாளமுடியா ஈரானிய மக்கள் கொதித்தெழுந்து போரட வந்துவிட்டனர், ஈரானிய புரட்சிபடை இரும்பு கரத்தோடு போராடுகின்றது

என்னதான் அரசு என்றாலும் மக்கள் கொதிதெழுந்தால் அவ்வளவுதான், இனி சொந்த மக்களை சுடமுடியாது என புரட்சிபடையினர் துப்பாக்கியினை கீழே வைத்தால் இறுக்கமான ஈரான் உடையும்

இதை பார்த்துவிட்டு “ம்ம் வெரி குட்.. பென்டாஸ்டிக்.. டிரம்பா கிரேனா (கொக்கா).. தேங்க்ஸ் ஜீசஸ்” என சொல்லியபடியே சோபாவில் சரிந்திருந்த டிரம்புக்கு வடகொரிய நினைப்பு வந்தது

அட, அந்த குண்டன் நாட்டுக்கும் இதைவிட கடும் தடை விதித்தோமே, வடகொரியாவில் சத்தமே இல்லையே? குண்டன் அனைவரையும் கொன்றே விட்டானா? இல்லை ஓணான் தவளை என தின்று வாழ்கின்றார்களா? எப்படி இருக்கின்றான் குண்டன் என விசாரித்திருக்கின்றார்

வடகொரிய தக்காளியோ “எனக்கு ஆயிரம் வேலை இருக்கு, ராக்கெட் விடணும் அணுகுண்டு செய்யணும் , உன்ன மாதிரி வெட்டி இல்ல நான். ரொம்ப பிசி, உன்கிட்ட பேசமுடியாது போ” என சொல்லிவிட்டு சென்றுவிட்டது

“வெரி ஷேம்.. உனக்கு இருக்குடா ஒருநாளு” என நம்பியார் பாணியில் சொல்லிகொண்டு ஈரானிய காட்சிகளை பார்த்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்.