உன் நிழலில் இருந்து ஆயிரம் கலாம்கள் இங்கு வருவார்கள்

எழுதிகொண்டே சாக வேண்டும் என ஆசைபடுவான் எழுத்தாளன், நடித்துகொண்டே சாக வேண்டும் என்பான் நல்ல நடிகன்

உழும்பொழுதே சாக வேண்டும் என்பான் விவசாயி , நான் செத்தாலும் தொழிற்சாலை இயங்க வேண்டும் என்பான் முதலாளி

பாடம் நடத்திகொண்டே சாக வேண்டும் என்பான் ஆசிரியன்

ஆம், அந்த மனிதன் விஞ்ஞானியாயிருந்தான் கொஞ்சம் கண் அசைத்திருந்தால் அமெரிக்காவின் தனியார் நிறுவணங்களோ நாசாவோ தங்க தொட்டிலில் டாலராய் கொட்டி தாலாட்டியிருக்கும்

ஆனால் நாட்டுக்காக வாழ்ந்த், மாணவர்களிடம் பேசி கொண்டே செத்தான் அல்லவா

அவனே தலைவன், அவனே இந்திய அடையாளம்

சிறிய பூசனிகொடி பெரும் காய்களை காய்ப்பது போல தன்னை மிஞ்சிய காரியங்களை இந்நாட்டுக்கு அவன் செய்தான்

அவனாலே இன்று ஏவுகனை பலம் பெற்றது தேசம், ஆசியாவின் எந்த இலக்கையும் நம்மால் தாக்க முடியும்

இந்து சந்திராயன் ஏவபட்டதிலும் அவன் கட்டிய அஸ்திவாரம் உண்டு

தென்னவனே எம் மன்னவனே அறிவு கண்ணனே

உமக்காக கண்ணீர் வடிக்கின்றது தேசம், அந்த ஒவ்வொரு சொட்டு கண்ணீரில் இருந்தும் ஆயிரம் கலாம் உருவாகி வருவார்கள்

எம் தேசத்தை காப்பார்கள்

சந்திராயனை அனுப்பிவிட்டு ஆர்பரித்த அந்த விஞ்ஞான தேவர்களை நாமும் கவனித்தோம்

அவர்கள் கண் அசைத்தால் ரஷ்யாவோ அமெரிக்காவோ சைனாவோ டால்ர்களை கொட்டி கொடுத்து அழைத்திருக்கும்

பில்கேட்ஸ் கூட கொடுக்கா சம்பளத்தை அந்நாட்டு அரசுகள் கொடுத்திருக்கும்

ஆனால் மிக எளிமையாக இந்நாட்டுக்கு என அரசு சம்பளத்தில் சாதரணமாக வாழ்ந்து அந்த தெய்வங்கள் சாதிதது நிச்சயம் உம் கனவு

ஆம் அந்த விஞ்ஞானிகள் உருவில் எம் மன்னவனே நீர் வாழ்ந்து கொண்டே இருப்பாய்

ஒரு நாளும் உனக்கு அழிவே இல்லை, உன் நிழலில் இருந்து ஆயிரம் கலாம்கள் இங்கு வருவார்கள்