உபி அலிகார் பல்கலைகழகத்த்தில் பெரும் சர்ச்சை வெடித்திருக்கின்றது

உபியில் அலிகார் பல்கலைகழகம் உள்ளது, அங்கு பெரும் சர்ச்சை வெடித்திருக்கின்றது

அது இஸ்லாமியருக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்ட கல்லூரி, இப்படி சில கல்லூரிகள் அங்கு இருந்தாலும் பெரும் கல்வி புரட்சி எல்லாம் ஏற்படவில்லை

இந்நிலையில் அங்கு என்னாயிற்று என்றால், இஸ்லாமிய பெரும்பான்மையினர் படிக்கும் கல்லூரி அல்லவா? அங்கு பாகிஸ்தானின் தந்தை ஜின்னா படத்தை வைத்திருக்கின்றனர்

நிச்சயம் எந்த இந்தியனும் இதை ஏற்றுகொள்ளமாட்டான்

கொடியவன் கோட்சேக்கு கொஞ்சமும் குறைந்தவரில்லை ஜின்னா

அந்த ஜின்னாவின் படத்தை சில விஷமிகள் வைத்து இவரும் போராட்ட வீரர் என்றெல்லாம் நியாயம் பேசியிருக்கின்றனர்

சர்ச்சை வெடித்து படம் அகற்றபட்டிருக்கின்றது

இந்த பெரும் விஷம செயலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கி இம்மாதிரி இத்தேசத்தில் இனி நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்

இத்தேசத்தை இரண்டாக பிளந்த துரோகிக்கு இங்கு திருவுருவ படம் என்பதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது

இந்த துரோகியின் படத்தை அகற்ற போராடியவர்களை வாழ்த்துகின்றோம்