உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள்
39 தொகுதிக்கு ஏகபட்ட வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள்
இதில் நாடாளுமன்றத்தில் உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள் யாரென பார்த்தால் வெகு சொற்பம்
கனிமொழி, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஈவிகேஸ் இளங்கோவன், சு.வெங்கடேசன் என சில முகங்கள்தான் இருகின்றன அதுவும் திமுக கூட்டணியில்தான் இருகின்றன
அன்புமணி போன்ற சிலமுகங்கள் எதிர்தரப்பில் இருக்கின்றன
ஆனால் அதே கூட்டணியில்தான் ஜெகத்ரட்சகன் போன்ற சர்ச்சை நபர்களும் இருக்கின்றார்கள், துரைமுருகன் மகன் மக்களவையில் சம்பள பணம் எண்ணிகொண்டிருந்தால் நன்றாயிராது
தரமில்லா திமுக வேட்பாளர், ஏற்கனவே அடிமைகளாய் இருந்த அதிமுக,, தேமுதிகவின் இம்சைகள், மன்சூர் அலிகான் போன்றவர்கள் டெல்லிக்கு சென்று என்ன பேசுவார்கள் என்பதுதான் தெரியவில்லை
ஏராளமான வேட்பாளர்கள் களத்தில் உண்டு எனினும் தொகுதிக்காகவும் மக்களுக்காகவும் பேசகூடிய தகுதியும் திறமையும் வெகு சிலருக்குத்தான் இருக்கின்றது
மக்கள் அதை கவனித்து வாக்களித்தால் அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் மாநிலத்திற்கும் மிக்க நல்லது