உலகம் அழிவதில்தான் அந்த கிறிஸ்தவருக்கு எவ்வளவு ஆசை?

இந்த அல்லேலூயா கோஷ்டிகளுக்கு உலகம் அழிய வேண்டும் அப்பொழுதுதான் மெசியா எனும் கிறிஸ்து இரண்டாம் முறை வருவார், தங்களை கட்டி அணைத்து முத்திவிட்டு மற்ற மதத்தாரை எல்லாம் மிதித்து தள்ளுவார் அப்பொழுது நாமெல்லாம் “கோட்டான கோடி இயேசப்பா” என கத்த வேண்டும் என்பது நெடுநாளைய மற்றும் ஒரே ஆசை

இதனால் உலகில் எங்காவது போர் தொடங்கிவிட்டால் இதோ உலக அழிவு என உடனே தொடங்குவார்கள்

இயற்கையோ , மானிட போரோ உலகை அழிக்கவேண்டும் என்பது அவர்களின் அதிதீவிர ஆசை..

ஒரிஜினல் இயேசு வரும் முன்னால் டூப்ளிகேட் இயேசு கன்னத்தில் மரு வைத்துகொண்டு வந்து உலகை மிரட்டுவாராம், அதனால் இயேசுவினை விட அந்த டூப்ளிகேட் இயேசுவினை காண அவர்களுக்கு கடும் விருப்பம்

ஏதாவது தீ வராதா? கடல் பொங்காதா? மலை பெயராதா? விண்மீன் மோதாதா? எனும் எதிர்பார்ப்பு என்றுமே உண்டு, ஒரு சுனாமி வந்ததும் உற்சாகமாக எழுவார்கள் பின் அடுத்த சுனாமி வராததால் அடங்கிவிடுவார்கள்

எரிமலை , சூறாவளி என்றாலும் இப்படியே, அணுவுலை என்றால் இன்னும் உற்சாகம். “இதோ வருகின்றார் இயேசு என கிளம்பிவிடுவார்கள், பின் அவர் வராததால் ஓஓ இன்னும் வரவில்லையோ..” என யோசித்தபடி சென்றுவிடுவார்கள்..

ஆட்சியாளர்களில் ரோம் மன்னன் நீரோ முதல் ஹிட்லர் வரை பார்த்துவிட்டு அட இன்னும் உலகம் அழியவில்லையா என சோர்ந்துவிட்டாலும் அவ்வப்போது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்

சோவியத் யூனியன் தலைவர் ஸ்டாலின், குருச்சேவ், எகிப்து அதிபர் நாசர், சதாம் உசேன் என பலர்மேல் நம்பிக்கை வைத்து தோற்றார்கள்

பின்லேடனை பெரிதும் எதிர்பார்த்தார்கள் அவரும் ஏமாற்றினார்

வடகொரிய அதிபரும் ஏமாற்றிவிட்டார், ஈரானும் அப்படியே

மோடியினையும் அப்படி எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர் அமைதியாக ஆட்சி செய்ய முணுமுணுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்

இப்பொழுது சிரிய அதிபரும், அந்த துருக்கி அதிபரும் புட்டீனும் ஈரானும் அவர்களுக்கு அந்த உலக அழிவினை தொடங்கிவைக்கும் டூப்ளிகேட் என தெரிகின்றார்கள்

ஆம் சிரிய அதிபர் ஏமாற்றிய நிலையில் இப்பொழுது குண்டுவீச தொடங்கியிருக்கும் எர்டோகன் உலக அழிவினை தொடங்கி வைக்கும் நபராக அல்லேலூயா கிறிஸ்தவர் கண்ணுக்கு தெரிகின்றார்

எப்படியும் பெரும் போர் தொடங்கி உலகம் அழியும் எல்லோரும் சாவார்கள் நாம் மட்டும் பிழைப்போம் என உற்சாகமாய் கைதட்டி கொண்டிருகின்றார்கள் வழக்கம் போல் ஏமாந்துவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்

இந்த அழகிய‌ உலகம் அழிவதில்தான் அந்த கிறிஸ்தவருக்கு எவ்வளவு ஆசை?