உலகம் அழிவதில் எப்பொழுதுமே அழிச்சாட்டிய கிறிஸ்தவருக்கு கடும் சந்தோஷம்

உலகம் அழிவதில் எப்பொழுதுமே அழிச்சாட்டிய கிறிஸ்தவருக்கு கடும் சந்தோஷம், அது என்னவோ தெரியவில்லை ஏதும் போர் செய்தி கேட்டால் “ஹய்யா ஜாலி உலகம் அழியபோகின்றது” என கிளம்பிவிடுவார்கள்

ஆனால் முதல் இரு உலகபோரில் ஏமாந்தார்கள், அமெரிக்க ரஷ்ய பனிபோரில் ஏமாந்தார்கள், கடைசியாக சிரியாவிடமும் வடகொரியாவின் குண்டனிடம் வரை ஏமாந்தார்கள்

இப்பொழுது ஈரானால் உலகம் அழியும் என வந்துவிட்டார்கள்

இது ஒரு மனோவியாதி போல, எங்காவது போர் தொடங்கிவிட்டால் ஒவ்வொருவனையும் பிடித்து “இதோ கடைசிகாலம் , இனி உலகம் அழியும் அதனால் இயேசுவினை ஏற்றுகொண்டு சாவு” என்பது அவர்கள் கொள்கை

இதெல்லாம் எங்கே என கேட்டால் திருவெளிப்பாடு எனும் பைபிளின் கடைசி புத்தகத்தை காட்டுவார்கள்

அதில் யாக்கோபின் 12 புதல்வர்களின் பெயரும் அவர்களின் வம்சாவழியில் இத்தனாயிரம் பேரும் மீட்கபடுவார்கள் என்றிருக்கும்

இதில் என் இனத்தின் முன்னோரான சவரிமுத்து நாடார் பெயர் இல்லையே, பின் நான் எப்படி சொர்க்கம் போவது என கேட்டால் “அப்பாலே போ சாத்தானே” அதோ அக்கினி இறங்குகின்றது என சொல்லிவிட்டு ஓடுவார்கள்

ஆம் அக்னியினை டீகடை பர்னரில் கண்டிருப்பார்கள்

இதே சர்ச்சை அடிக்கடி வரும், இதுபற்றி ரமண மகரிஷியிடம் கேட்டார்கள், “அய்யா உலகம் விரைவில் அழியுமா? அச்சமாக இருக்கின்றதே..”

அந்த பழுத்த பழம் சொல்லிற்று ” அது இந்த உலகை எவன் படைத்தானோ அவனின் பிரச்சினை.

உனக்கும் எனக்கும் என்ன? நாம் எதை மாற்றிவிட முடியும்?”