உலகம் ஆச்சரியத்தின் உச்சத்தில் பார்க்கின்றது

ரமலான் மாதம் என்றாலும் பாலஸ்தீனம் பற்றி எரிகின்றது, ஏகபட்ட ஏவுகனைகள் டெல் அவிவ் மேல் ஹமாஸ் போராளிகளால் எறியபட்டாலும் இஸ்ரேலிய அயன் டோம் அட்டகாசமாக முறியடிக்கின்றது

இன்றைய உலகின் மிக நுட்பமான ஏவுகனை பாதுகாப்பு சாதனம் அதுதான், உலகம் ஆச்சரியத்தின் உச்சத்தில் பார்க்கின்றது

கார்த்திகை மாத மழையாக ஏவுகனைகள் அடைமழையாக கொட்டினாலும் உட்புக முடியவில்லை, அட்டகாசமான நுட்பம் அது

அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதை டெல் அவிவில்தான் காணமுடிகின்றது

அவர்களின் எதிர்ப்பு ஏவுகனைகள் நாகபாம்பு போல வளைந்து நெளிந்து சென்று சரியாக எதிரியின் கனையினை வீழ்த்தும்பொழுது பல கண்களால் அதை நம்பவே முடியவில்லை

ஆச்சரியங்களை கொடுக்கும் நாடு அது, அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்

சரி, பாலஸ்தீன போராளிகளுக்கு இவ்வளவு ஆயுதங்களும் ஏவுகனைகளும் எங்கிருந்து வருகின்றன? யார் சப்ளை

அந்த தொடர்ச்சி லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அதன் பின்னணி பலமான ஈரான், சிரியா என பல திசைகளுக்கு செல்கின்றன‌

இஸ்ரேல் சிரியாவில் தீபாவளி வைக்க இதுதான் காரணம்

இப்பொழுது வழக்கமான முரட்டு அடியில் இறங்கியிருகின்றது இஸ்ரேல்

ஆம், நாளை அவர்களின் சுதந்திர தினம், கிட்டதட்ட 2 ஆயிரம் ஆண்டு போராட்டம் நினைவான தினம்

இன்னொருமுறை இஸ்ரேலை விட்டு அகலமாட்டோம், எந்த ஆபத்துவந்தாலும் உலகையே எதிர்த்தாவது விரட்டுவோம் என நிற்கும் அந்த வெறிமிக்க கூட்டம் பல இடங்களில் சொல்லும்

இப்பொழுது பாலஸ்தீனத்தை அப்படி சொல்லித்தான் நொறுக்கி சொல்லிகொண்டிருக்கின்றது

அநேகமாக நாளை பெரும் தாக்குதலை நடத்திவிட்டுத்தான் டெல் அவிவில் தேசிய கொடியினை ஏற்றுவார்கள் போல..