உலகம் சுற்றும் மோடி…

https://youtu.be/CpZ4mUhfH14

 

உலகெல்லாம் சென்று மோடி இந்தியாவிற்கு நல்ல விஷயங்கள் கொண்டு வருகின்றாராம், இப்பொழுது ஜப்பான் சென்றிருக்கின்றாராம்

ஜப்பானியர்களின் ஸ்பெஷாலிட்டியே மதத்தினை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு படுசமர்த்தாக வேலை செய்வது, வருடத்தில் ஓரிரு நாள் மட்டுமே கடவுள் நினைவுக்கு வருவார்

மத ரீதியான விஷயங்களில் இருந்து, அம்மாதிரியான அரசியலில் இருந்து அந்நாடு தள்ளியே நிற்கின்றது

உலகில் முன்னணியில் இருக்கின்றது.

அம்மாதிரி நல்ல விஷயங்களை மோடி இந்தியாவிற்கு கொண்டு வருவாரா என கேட்டால் பதில் இருக்காது

நல்லவேளையாக மோடி சென்றார், இதுவே தமிழகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்றிருந்தால் என்னாகும்?

இங்குதான் தலைவர் “உலகம் … அழகு கலைகளின்..” என ஆடினார், இங்குதான் நம்பியாரை சாத்தினார், இங்குதான் தொங்கிகொண்டே இருந்தார் என கன்னத்தில் போட்டு வணங்கி கொண்டிருப்பர்கள்.