உலகம் சுற்றும் வாலிபன் எனும் படத்தில் …
உலகம் சுற்றும் வாலிபன் எனும் படத்தில் அந்த ராமசந்திரன் உலக விஞ்ஞானிகள் கூட்டத்தை நடத்துவார், அவரும் ஒரு விஞ்ஞானி.
தலைசிறந்த விஞ்ஞானிகள் எல்லாம் அந்த கூட்டத்திற்கு வந்திருப்பர், யாரெல்லாம் தெரியுமா?
ஒருவிரல் கிருஷ்ணராவ், பகோடா காதர், அசோகன், தேங்காய் சீனிவாசன் இன்னபிற
அங்கு அவர் தன் கண்டுபிடிப்பை விளக்குவதையும் அதற்கு அந்த உலக விஞ்ஞானிகள் கொடுக்கும் ஓவர் பில்டப்பும் பெரும் காமெடிகள். டெங்கு நோயாளி கூட சிரித்துவிடுவார்.
இந்த அமைச்சரவையினை பார்க்கும்பொழுது அந்த ராமசந்திரன் சொன்ன உலக விஞ்ஞானிகளின் மாநாடு காட்சிதான் நினைவுக்கு வருகின்றது
ராமசந்திரனின் விஞ்ஞான மாநாட்டு சினிமா 200 நாட்கள் மட்டும் தமிழகத்தில் தெரிந்ததாம்.
இந்த விஞ்ஞான அமைச்சரவை கொடுமைக்கு இப்பொழுதெல்லாம் முடிவே இல்லை என்பதுதான் சோகம்
தலைசிறந்த விஞ்ஞானிகள் எல்லாம் அந்த கூட்டத்திற்கு வந்திருப்பர், யாரெல்லாம் தெரியுமா?
ஒருவிரல் கிருஷ்ணராவ், பகோடா காதர், அசோகன், தேங்காய் சீனிவாசன் இன்னபிற// இது தவறான தகவல். விஞ்ஞானிகளில் ஒருவராக அந்தப்படத்தில் அசோகன் மட்டுமே வருவார்.