உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும்
நாம் மோடி ஆதரவாளர் அல்ல, சங்கியும் அல்ல ஆயினும் சில உண்மைகளை அதாவது உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும்
தமிழக பத்திரிகைகளும் டிவிக்களும் சொல்ல தயங்கும் அல்லது மறைக்கும் விஷயத்தை உங்களிடம் சொல்கின்றோம், விசாரித்து பாருங்கள் தெளிவு கிடைக்கும்
விஷயம் காஷ்மீர் சம்பந்தமானது
இந்த 70 வருட இந்திய வரலாற்றில் மராட்டிய அதிகாரி, தமிழக அதிகாரி, பீகாரிய அதிகாரி ஆளுநர் இப்படி எங்காவது கேள்விபட்டதுண்டா
இன்னும் விளக்குகின்றோம் பஞ்சாபியரும், பீகாரியும், மராட்டியரும், தமிழகத்தில் கலெக்டர் சூப்பிரிட்டென்ட்டட் என பதவியில் இருப்பார்கள், தமிழர் வட மாநிலங்களில் இருப்பார்கள்
ஆனால் காஷ்மீரிகளை நீவீர் அப்படி கண்டதுண்டா, ராணுவத்தில் கூட அவர்கள் இல்லை
ஆம் 70 வருடமாக அவர்களை பொத்தி பொத்தி வைத்து தனிமைபடுத்திவிட்டோம் இந்தியர் என்ற உணர்வு இந்த திமுக இம்சைகளை போல அவர்களுக்கும் இல்லை
இந்த அரசு அதை உடைக்க நினைக்க்கின்றது, என்ன ஆனாலும் அவர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க செய்யவேண்டும் என முடிவெடுத்துவிட்டது
முதற்கட்டமாக காவல்துறை, துணை ராணுவம் உள்ளிட்ட அமைப்புக்களில் நீ இந்தியன் இந்தியாவுக்கு பணியாற்றவா என அழைத்து கலக்க செய்கின்றது
அவர்களின் பள்ளி கல்லூரிகளில் அரச பணியிடங்களுக்கான தேர்வு பயிற்சிகள் அதிகரிக்கபடுகின்றன
நீ காஷ்மீரிதான் சந்தேகமில்லை ஆனால் இந்திய காஷ்மீரி இங்கு நாடெல்லாம் உனக்கு சகோதரர்கள் உண்டு, நாங்கெளெல்லாம் உனக்கு துணை நிற்கின்றோம் என தேசம் அவர்களை வரவேற்கின்றது
இது காஷ்மீருக்கு புதுசு, லடாக்கிற்கு புதிய அணுகுமுறை
இப்படி ஒரு காலத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்களோ என்னமோ ஆனந்ததுடன் ஓடிவருகின்றார்கள்
இப்பொழுதுதான் பெரும் சுவர் தகர்ந்தது போல் உணர்ந்து இந்திய நீரோட்டத்தில் கலக்கின்றார்கள்
70 வருடகாலமாக பழைய அரசுகள் ஏன் இதை செய்யவில்லை என்றால் அதுதான் தெரியவில்லை
இந்த அரசு மிக சரியாக அதை உடைகின்றது, காஷ்மீரிகள் இந்தியாவோடு இணைய எதை எல்லாம் செய்யவேண்டுமோ எதை எல்லாம் உடைக்க வேண்டுமோ அதை எல்லாம் உடைக்கின்றது
அந்த மகா 370 எனும் சுவர் இல்லை
பெரும் கோட்டைக்குள் தனித்து இயங்கிய மக்களை எம்மோடு கலந்து இந்தியராய் வாழுங்கள் என அழைத்து வருகின்றது இந்த அரசு
இது ஒவ்வொரு இந்தியனும் கைதட்டி வரவேற்க வேண்டிய அணுகுமுறை
மதமோ, இனமோ, மொழியோ எமக்கு சிக்கல் இல்லை, நீ ஒரு இந்தியனாய் எம்மில் கலந்துவிடு என உறவோடு கைநீட்டி அவர்களை அணைக்கின்றது இத்தேசம்
இதை தமிழக மீடியா சொல்லாது, கட்சிகளும் பேசாது
ஏன் என்றால் இவர்கள் பிழைப்பு ஓடாது
ஈழம் எரியும் பொழுது இங்கே எவ்வளவு ஆட்டம் ஆடினார்கள் இப்பொழுது எல்லாம் மகா அமைதி ஏன்?
ஆம் ஈழத்தில் இனி சண்டைக்கு வாய்ப்பில்லை குறுகிய மனப்பான்மையில் இருந்து வாருங்கள் நாமெல்லாம் இலங்கையர் என இலங்கை அரசின் வரவேற்புக்கு அங்கு பதில் கிடைத்தது
ஈழதமிழர் சிங்களரோடு இணைந்து நாம் இலங்கையர் என வாழ ஆரம்பித்தாயிற்று அமைதி திரும்பிற்று
ஈழமக்கள் அமைதியாக வாழ்வது இங்குள்ளோருக்கு சோகம், மகா சோகம்
ஒரு இனம் அழியும்பொழுது ஆடுவதும் அது வாழும் பொழுது சோகத்தில் மயான அமைதிகாப்பதும் தமிழக அரசியல் மற்றும் ஊடகத்தின் அயோக்கிய முகம்
அதே முகத்தை காஷ்மீர் விஷயத்திலும் தமிழக மீடியாக்களும் கட்சிகளும் காட்டுகின்றன
ஈழத்தை போல காஷ்மீரிலும் அமைதி திரும்பிற்று
வாருங்கள் நாம் இந்தியராய் வாழ்வோம் என்ற மிக அன்பான உறவுக்கு தேசமும் அரசும் கைகொடுக்கும்பொழுது அவர்களும் வருகின்றார்கள்
பலர் ஓடிவந்து தேச சேவைகளில் பங்கெடுக்கின்றார்கள்
அந்த ஒவ்வொரு இந்தியகாஷ்மீரிய சகோதரனையும் தேசிய நதியில் இணையவரும் அந்த ஒவ்வொருவரையும் கைகொடுத்து வாழ்த்தி நம்மில் ஒருவராக கலக்க செய்வது நம் கடமையும் தேசத்துக்கான சேவையுமாகும்
75 ஆண்டுகளாக அழுத அவர்களின் கண்ணீர் துடைக்கபடும் நேரமிது
அதில் நம் கரங்களும் இருக்கட்டும், அவர்கள் கண்ணீரை துடைத்து புன்னகைக்கும் முகங்களோடு அவர்களை அரவணைப்போம்
வாருங்கள் காஷ்மீரிகளே, இனி நாமெல்லாம் இந்தியர்கள். எங்கள் கரங்களை பற்றிகொண்டு உள்ளே வாருங்கள்
புதிய இந்தியாவினையும் புதிய காஷ்மீரையும் படைப்போம்