உலகை கவனிக்கின்றோம்

நாம் சமூக நீதிக்கு எதிரானவனாக இருந்துவிட்டு போகின்றோம், ஆனால் உலகை கவனிக்கின்றோம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல், சிங்கப்பூர் என பல நாடுகளை பார்க்கின்றோம், இன்று முன்னணியில் இருக்கும் நாடுகள் எல்லாம் எவனுக்கு எந்த திறமை உண்டோ அந்த அடிப்படையில் வாய்பளிக்கின்றன‌

திறமையே பிரதானம் என கொண்டாடும் நாடுகள் வல்லரசாய் திகழ்கின்றன, விளையாட்டு பொருளாதாரம் ராணுவம் என அவை உச்சத்தில் இருக்கின்றான்

ஆம் அங்கே இட ஒதுக்கீடு இல்லை மாறாக திறமைக்கான அங்கீகாரம் இருக்கின்றது அவை உருப்படுகின்றன‌

வெள்ளையர்கள் வியாபாரம் மற்றும் இதர பணியில் கலக்கி எடுக்க கருப்பர்கள் விளையாட்டு பாதுகாப்பு இன்னபிற பணிகளில் வலுவாய் இருக்கின்றார்கள்

இட ஒதுக்கீடு என கருப்பர்களுக்கு எல்லாமும் கொடுத்திருந்தால் அமெரிக்கா இன்று வல்லரசாய் இராது

ஆயினும் எந்த ஒரு கருப்பனும் தன் நாட்டை குறை சொல்லி கேள்விபட்டதில்லை, அவர்களுக்கான சில சர்ச்சைகளை பேசிகொள்கின்றார்களே தவிர தாய் நாட்டினை கேள்வி கேட்டதில்லை நேசிக்கின்றார்கள்

அவனவனுக்கு என்ன திறமையோ அதை பயன்படுத்தி நாட்டை உயர்த்துதல் நலம், அமெரிக்கா அதை மிக சரியாக செய்கின்றது உலகை ஆள்கின்றது

கம்யூனிச சீனா இன்னும் சரியாக செய்கின்றது

இந்த பர்மா, இலங்கை இன்னபிற வளமான தேசங்களை எல்லாம் உற்று கவனிக்கின்றோம் அவை உருப்படாமல் போக முதல் காரணம் இட ஒதுக்கீடு

இலங்கையினை உதாரணத்துக்கு எடுக்கின்றோம், அது வளமையும் செழுமையும் கொண்ட தேசமாய் 1930களில் இருந்தது, இங்கே பெரியார் எனும் நாத்திகன் போல் அங்கொரு ஆத்திகன் வந்தான் அவன் பெயர் அனாரிக தர்மபால‌

அவனே சிங்கள பேரினவாதத்தை தொடங்கிவைத்தான் அதிலிருந்து தொடங்கிய இலங்கை சரிவு இன்னும் மீளவில்லை

நிச்சயம் திறமை அடிப்படையில் வாய்பளிக்கும் தேசமாயின் ஈழதமிழன் அதை எங்கோ நிறுத்தியிருப்பான் , அத்தீவு சிங்கப்பூரையும் மிஞ்சி நின்றிருக்கும்

ஆனால் சிங்களருக்கான இட ஓதுக்கீட்டால் நாசமாயிற்று

பர்மாவிலும் அதே நிலையே

நாம் இன்னும் கவனமாக பார்க்கின்றோம், வெள்ளையன் இந்நாட்டை ஆளும் பொழுது அவன் நாட்டில் இட ஒதுக்கீடு இல்லை இன்றுவரை இல்லை

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இட ஒதுக்கீட்டை தூண்டிவிட்டிருக்கின்றான், அதை ஊக்குவித்திருகின்றான்

ஆம் தன் நாட்டை எப்படி காக்கவேண்டும் எனபது அவனுக்கு தெரிந்திருந்தது, இந்தியா போன்ற நாடுகளை எப்படி நாசமாக்க வேண்டும் என்பதும் அவனுக்கு தெரிந்திருந்தது.

அவன் இந்தியாவினை ஆளும்பொழுது இட ஒதுக்கீடு கொடுத்தானா? சட்டம் இயற்றினானா? இல்லை.

தன் ஆட்சியும் ராணுவமும் நிலைக்க திறமையானவர்களே தேவை என தேடினான்

அவர்கள் எக்குலத்தில் இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை, திறமையே முக்கியம் என கண்டான்

ஆனால் இந்தியாவில் குழப்பம் வர சமூக மட்டத்தில் சிலரை இட ஒதுக்கீடு அது இது என தூண்டிவிட்டிருந்தான், மிக பெரும் ராஜதந்திரம் இது

இட ஒதுக்கீடு என திறமை இல்லாதவனை அமரவைத்தால் என்னாகும் என்பதை நிர்வாக ரீதியாக கண்டவன் வெள்ளையன்

தன் ஆட்சியில் கொடுக்க விரும்பாததை சமூகத்தில் சில புல்லுருவிகளால் சொல்ல வைத்து ரசித்து கொண்டிருந்தான், முட்டாள் சமூகமும் அதை நம்பியது

அன்றைய புரட்சி சிந்தனையாளர் சட்டையினை பிடித்து ஆளும் வெள்ளையனிடம் சமூக நீதி வாங்கித்தா என கேட்க அவர்களுக்கும் சிந்தனையில்லை

பெரியார் என்பவரும் அம்பேத்கர் என்பவரும் சமூகத்தில் உரண்டு புரண்டார்களே தவிர வெள்ளை அரசாங்கத்திடம் இட ஒதுக்கீடு கொடு என கேட்கவில்லை, வெள்ளை அரசாங்கத்தில் தலித் பிரந்திகளும் கலெக்டர்களும் வேண்டும் என யார் கேட்டார்கள்?

வெள்ளையனின் கலெக்டர் பதவி சக்திவாய்ந்தது, அதில் இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்ட புரட்சியாளன் இங்கு யார்? ஒருவனுமில்லை

எல்லாம் வெத்துவேட்டுக்கள்

நாம் உலக பார்வையில் எம் தேசத்தை ஒப்பிட்டு சொன்னோம், தேச ஒப்பீடுகளின் அடிப்படையில் சொன்னோம்

இதற்கு மேலும் நாம் சமூக நீதி எனும் இல்லா ஒன்றிற்கு எதிரானவன் என சொல்வீர்களாயின் அதை பெருமையுடன் ஏற்றும் கொள்கின்றோம்

திறமை இருப்பவனுக்கு ஒரு விஷயத்தை சாதி காட்டி மறுத்து திறமை இல்லாதவனுக்கு பிறப்பின் அடிப்படையில் ஒன்றை சமூகம் கொடுக்குமாயின் அதுவே சமூக அநீதி…

இங்கு நடப்பது சமூக அநீதி, அதனால் தேசம் நாசமாகிகொண்டிருப்பது கொஞ்சமல்ல.

வார்த்தைகளை வாபஸ் வாங்கமுடியாது போங்கடா டேய்