உலக அரசியல்
தென் அமெரிக்காவில் தன் காலை வைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகால கனவு
அந்த லத்தீன் அமெரிக்க நாடுகளுகளுக்கும் அமெரிக்காவுக்கும் உரசல் அதிகம், பிரிட்டன் வம்சம் ஸ்பெயின் போர்ச்சுக்கல் வம்சம் கத்தோலிக்கம் பிரிவினை உட்பட ஏக சிக்கல்
இரண்டாம் உலகபோரிலே அவை ஹிட்லரைத்தான் ஆதரித்தன
இதில் கியூபா மட்டும் கம்யூனிஸ்டாக மாறி ரஷ்ய உறவினை பெற்றது மற்ற நாடுகள் தமிழகம் போல ஆட்சியாளர்களால் சுரண்டபட்டது சில போதை கும்பலிடம்சிக்கியது
சில நாடுகள் பரவாயில்லை
இப்பொழுது வெனிசுலாவில் கடும் சிக்கல் என்பதால் கொலம்பிய வழியாக அமெரிக்கா ஊடுருவும் ஆபத்து வந்தது
ஆம் கொலம்பியாவின் போதை கும்பலை கட்டுபடுத்துகின்றோம் என அங்கு சில நகர்வுகளை செய்தது அமெரிக்கா அங்கிருந்து வெனிசுலாவுக்கு காலை நீட்டியது
முதன் முறையாக அமெரிக்க ராணுவம் கால்பதிக்கும் நிலை வந்தது, காரணம் வெனிசுலாவின் எண்ணெய்
அப்பொழுதுதான் அந்த ரஷ்ய விமானம் வந்தது பயணிகள் விமானமே, முதலில் அப்படித்தான் உலகம் நினைத்தது
ஆனால் அதில் 200 ரஷ்ய ராணுவத்தார் வந்ததை கண்டறிந்த சிஐஏ அமெரிக்காவுக்கு தகவலை சொன்னது
உடனே மைக்கை தட்டி” ஹலோ உலகமே ரஷ்ய படைகள் வெனிசுலாவுக்கு வந்துவிட்டது தெரியுமா?” என சொல்லிவிட்டு கண்கள் சிவக்க அமர்ந்து கொண்டது
அதற்கு மேலும் மவுனம் காக்க முடியாத ரஷ்யா ஆம் எங்கள் ராணுவ வீரர்கள் வெனிசுலாவுக்கு அலோசனை சொல்ல சென்றார்கள் என சொல்லிவிட்டு சிரிப்பை அடக்கி கொண்டது
“ரஷ்யா வெனிசுலாவிலிருந்து வெளியேறட்டும்” என கொந்தளித்தது அமெரிக்கா
“முதலில் சிரியாவில் இருந்து நீ கிளம்பு பார்க்கலாம்..” என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது புட்டீனின் ரஷ்யா
ஆக வெனிசுலாவில் கால்பதித்து அமெரிக்காவுக்கு பிரம்போடு தயாராகிவிட்டது ரஷ்யா
உலக அரசியல், எண்ணெய் அரசியல் தென் அமெரிக்க அரசியல் என ஏக அரசியல் இதில் இருக்கின்றது
“என் காலடிக்கு அருகே நீ வந்தால் உன் காலடிக்கு அருகே நான் வராமல் இருப்பேனா?” என மிக தைரியமாக வந்து நிற்கின்றது ரஷ்யா
இனி அமெரிக்க பர்கர் வெனிசுலாவில் வேகாது, சிரியா போல ஒரு கை பார்த்துவிடுவது என வந்துவிட்டார் புட்டீன்
ரஷ்ய வருகையால் தன் வெனிசுலா திட்டத்தை தலைமேல் கை வைத்து பார்த்துகொண்டிருகின்றது அமெரிக்கா
சும்மா சொல்ல கூடாது , புட்டீன் என்ற மனிதர்தான் எப்படி எல்லாம் அடித்து ஆடுகின்றார்?
(உலக அரசியல் என்பது இதுதான், ஒவ்வொருவர் நலமும் அவர்களுக்கு முக்கியம்
சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் புகுந்து அடிப்பார்கள்
இப்படி இலங்கையில் அவர்கள் புகுந்து அடிக்க துடித்த நேரம்தான் இந்தியா தலையிட்டு பல காரியங்களை செய்தது
அதன்பெயர் ஈழதமிழருக்கான இந்திய துரோகம்
இதோ ரஷ்ய படைகள் வெனிசுலாவில் இருக்கின்றன, வெனிசுலா மக்கள் ஏ ஆக்கிரமிப்பு படையே வெளியே போ என சண்டையிட்டு புட்டீன் மேல் சுட்டால் என்னாகும்?
அட சிரியர்களோ குர்தியரோ செய்தால் என்னாகும்?
இதைத்தான் அன்று மடையன் பிரபாகரன் செய்தான்..)