உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால்
உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால் நாசாவினையும் அதற்கு படியளக்கும் அமெரிக்க அரசையும்
ஆம் மாபெரும் பொருட்செலவில் பிரபஞ்ச ரகசியங்களை அறிய அமைக்கபட்ட அந்த அமைப்பு அதை எல்லாம் விடுத்து என்ன காரியம் செய்கின்றது தெரியுமா?
திருநள்ளாறு ஆலயம், சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை எல்லாம் தன் செயற்கை கோள்கள் மூலம் கடும் ஆய்வினை செய்து வருகின்றது
அட கொடிமரம், தெப்பகுளம் என எதனையும் அது விடுவதில்லை
அந்த ஆய்வுமுடிவினை போகிற போக்கில் பிரின்ட் அவுட் எடுத்து வானத்தில் இருந்தே பொத்தென்று கீழே வீசிவிடுகின்றது
அதை எடுக்கும் இந்து அபிமானிகள் அப்படியே கலங்கி அழுதுவிட்டு அதை முகநூல் உட்பட சமூக ஊடகமெல்லாம் பரப்புகின்றனர்
ஆனால் ஒருவருக்கும் நாசாவுக்கும் அமெரிக்க அரசுக்கும் நன்றி சொல்ல மனமில்லை
ரஷ்யாவின் சோயுஸ் கலம், சீனாவின் கலம், சர்வதேச விண்வெளி நிலையம் என எதுவும் செய்யாத விஷயங்களை நாசாவின் கலம் மட்டும்தான் செய்கின்றது பாவம்..
இனியாவது டிரம்புக்கும், நசா இயக்குநருக்கும் நன்றி சொல்லி தொலையுங்கள்..
இல்லையேல் நாசபாவம் (பாபநாசம் அல்ல) சும்மா விடாது
