உலக காற்று இந்தியாவுக்கே சாதகமாக வீசுகின்றது

இங்கு என்னதான் காஷ்மீர.. என சிலர் ஒப்பாரி வைத்தாலும் உலக காற்று இந்தியாவுக்கே சாதகமாக வீசுகின்றது

ஆம் பாகிஸ்தான் விரக்தியின் உச்சத்துக்கு போய்விட்டது, நேற்று அவர்களின் சுதந்திரதிருநாள் வாழ்த்து மொகாரி ராகம் ஆகிவிட்டது

சீனா ஏதாவது உருப்படியாக செய்யும் என அது மிக எதிர்பார்த்த நிலையில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்துக்கு பின் சீனா காட்டும் அமைதி பாகிஸ்தானுக்கு பலத்த அதிர்ச்சி

வழக்கமாக சுதந்திரநாள் என்றால் இந்தியாவினை பிளப்போம், காஷ்மீரை மீட்போம், இஸ்லாமியரை காப்போம் என்றெல்லாம் கோஷமிடும் பாகிஸ்தானிய உயர்பீடம் நேற்று மூக்கை சீந்தி அழுதுகொண்டிருந்தது

பாகிஸ்தானின் வெளியுறவுதுறை அமைச்சர் தன் மக்களிடம் உடைந்த குரலில் சொன்ன வார்த்தைகள் இவை

“நாம் என்னதான் இஸ்லாமுக்காக வாழ்ந்தாலும் இஸ்லாமிய சகோதரர்களை வாழ வைக்க நினைத்தாலும் நமது சகோதர நாடுகள் நம்மோடு இல்லை

அரபு நாடுகள் அவர்கள் பக்கமே இருக்கின்றார்கள், இன்னும் பல இஸ்லாமிய நாடுகளும் அந்த பக்கமே சரிகின்றார்கள்

உலக வல்லரசுகள் நமக்கும் நம் நியாயத்துக்கும் துரோகம் செய்கின்றன, பெருமை மிகு பாகிஸ்தானின் நியாயத்தை சொல்ல யாருமில்லை

நாம் ஆகஸ்ட் 6ம் தேதி ஐநாவினை கூட்ட சொல்லி கொடுத்த அவசர கடிதத்தை திறந்து கூட அச்சபை பார்க்கவில்லை எனில் நம் நிலையினை பாகிஸ்தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்”

ஆக பாகிஸ்தான் மக்களிடமே அந்நாட்டு மேலிடம் இப்படி அழுதால் என்ன அர்த்தம்?

இனி காஷ்மீரை மறந்துவிட்டு வேறு வேலையினை பார்க்கலாம் மக்களே என கதறுகின்றார்கள் என பொருள்

உலக அரங்கில் இந்தியா பெரும் ஆதரவோடு இந்திய‌ காஷ்மீர் விவகாரத்தை முடித்து பெரும் வெற்றிபெற்றாகிவிட்டது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் கதை என்னாகும் என்பது இனிதான் தெரியும்

பாகிஸ்தான் அமைச்சருக்கு நாம் சொல்வது ஒன்றுதான்

ஏ சல்மான் குரோஷி எனும் பாகிஸ்தான் அமைச்சரே, உங்கள் பக்கம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா அரபு நாடுகள் இன்னும் ஐரோப்பிய நாடுகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு வழி இருக்கின்றது

காதை அருகில் கொண்டுவாருங்கள் சொல்கின்றேன்

எங்கள் ஊரில் திமுக, மதிமுக, விசிக இன்னும் ஏகபட்ட கோஷ்டிகள் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசை எதிர்த்து மல்லுகட்டுகின்றன, நீங்கள் ஏன் அவர்களை அணுக கூடாது

மு.க ஸ்டாலின் வைகோ திருமாவளவன் எல்லாம் யார் தெரியுமா?

ரஷ்ய புரட்சி, கியூப புரட்சி , சீன புரட்சிகளை நடத்தி கொடுத்துவிட்டு மாறுவேடத்தில் இங்கு பதுங்கியிருப்பவர்கள் அது யாருக்கும் தெரியாது

நீவிர் அவர்களை மட்டும் அரவணையுங்கள், காஷ்மீர் என்ன? மொத்த இந்தியாவினையும் உங்களுக்கு மீட்டு தந்து அகண்ட பாகிஸ்தான் அமைப்பார்கள்

இப்போதைக்கு உங்களுக்கும் அவர்களை விட்டால் யாருமில்லை, அவர்களுக்கும் உங்களை விட்டால் வழியுமில்லை

சொல்வதை சொல்லிவிட்டோம், இனி உங்கள் பாடு”