உலக கால் பந்து போட்டி : ரஷ்யா ஸ்பெயினை வீழ்த்தியது
அயர்லாந்து அணி இந்திய கிரிக்கெட் அணியினை வென்றால் எப்படி இருக்கும்? திடீரென வைகோ கட்சி ஆட்சியினை கவிழ்த்தால் எப்படி இருக்கும்
அப்படி இருக்கின்றது ரஷ்யா கால்பந்தில் ஸ்பெயினை வீழ்த்தி இருப்பது
ஸ்பெயின் கால்பந்தில் வலுவான அணி, முன்னாள் சாம்பியன் கூட. பார்சிலோனா போன்ற வலுவான கால்பந்து கிளப்களை கொண்டு நல்ல வீரர்களை உருவாக்கும் நாடு
ரஷ்யா உலக அளவில் 75ம் இடத்தில் இருக்கும் அணி ஸ்பெயின் முதல் 20 இடங்களுக்குள் வரும் அணி
இதனால் ரஷ்யாவின் தோல்வி உறுதி என்றுதான் ஆட்டம் தொடங்கியது
ஸ்பெயினின் பலம் கோலடிப்பது அல்ல, வாய்ப்பு கிடைத்தால் அடிக்கலாம் ஆனால் எதிரணி கோல் அடிக்காமல் உயிரை கொடுத்து தடுப்பார்கள், முக்கால்வாசி நேரம் பந்தை முக ஸ்டாலின் கட்சி நடத்துவது போல இழுத்து கொண்டே இருப்பார்கள் ஆனால் கோலடிக்க மாட்டார்கள்
இந்த யுத்தியினை ரஷ்யாவும் செய்தது, இருவருமே 1 கோல் அடித்துவிட்டு கோல் அடிப்பதை தடுப்பதிலே கவனம் செலுத்த இறுதியில் பெனால்டி வாய்ப்பானது
அதன் பின் ஆட்டம் கோல் கீப்பர் கைக்கு செல்ல, ரஷ்யா கோல் கீப்பர் வெற்றியினை கொடுத்தார்
சொந்த நாடென்பதால் மகா உற்சாகமாக ஆட்சி கால் இறுதிக்கு சென்றுவிட்டது ரஷ்யா, அவர்களை பொறுத்தவரை மிகபெரும் விஷயம்
ஆச்சரியங்கள் தொடர்கின்றன
இந்த பிரேசில் மெக்ஸிகோ ஆட்டத்தில் என்ன ஆச்சரியம் இருக்குமோ தெரியவில்லை
ஒவ்வொரு உலககோப்பையிலும் அழுது கொண்டே வெளியேறும் மாரடோனாவுக்கும், தேர்தல் முடிவில் தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் டெல்லி பாஜகவிற்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை