உளவு வாட்சின் கதை…..
உளவு சரித்திரங்கள் எப்பொழுதும் சிலாகிப்பானவை, அதிலும் மொசாத்தின் சரித்திரம் அதிரவைப்பது, இப்பொழுது ஆளாளுக்கு வாட்ச் பற்றி பேசுவதால் அவர்களின் பிரசித்தியான வாட்ச் பற்றியும் பேசலாம்
அந்த வாட்ச் தயாரித்தது இஸ்ரேலிய மொசாட், தயாரிக்கபட்டது எலிகோகன் என்பவருக்காக
அவர் ஒரு எகிப்து யூத பிறப்பு, 1924ல் பிறந்த அவர் பின் இஸ்ரேலுக்கு வந்து பின் இஸ்ரேலிய மொசாத்தில் இணைந்து 1950களிலே தரமான உளவாளியானார்
அவரை சிரியாவுக்குள் அனுப்ப திட்டமிட்டது மொசாத், இஸ்ரேலின் மிகபெரிய எச்சரிக்கையில் ஒன்று சிரியா, அந்த ஜோர்டான் ஆறும் இன்னும் பல சிக்கலும் எப்பொழுதும் சிரியாவினை இஸ்ரேல் அடக்கி வைக்க சொல்லிகொண்டே இருக்கும்
அப்படி உள்ளே நுழைந்தார் கோகன், அப்பொழுது இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர், தளபதி அந்த படுபயங்கர ஆசாமியான ஒற்றைகண்ணன் மோசே தயான்
எல்லோரும் சேர்ந்து அர்ஜென்டினாவுக்கு இவரை அனுப்பி, அங்கு ஹிட்லர் காலத்தில் தப்பி சென்ற அரபு குடும்பமாக ஹிட்லர் அபிமானி தொழிலதிபராக காட்டி சிரியாவுக்கு அனுப்பினார்கள்
அர்ஜென்டினா தொழிலதிபராக டமாஸ்கஸ்க்கு வந்த கொகன் மெல்ல மெல்ல பல தொடர்புகளை பிடித்து சிரிய ஆட்சிக்கு நெருக்கமாக மாறி ராணுவத்திலும் புகுந்தார், ஏகபட்ட தகவல்கள் இஸ்ரேலுக்கு வந்தன
அப்பொழுது மிக பலமான சோவியத் ரஷ்யா சிரியாவில் இருந்தது, அவர்கள்தான் அன்றும் சிரியாவுக்காக போரை நடத்தினார்கள், போரில் சிரியா படுதோல்வி
தோல்விக்கான காரணங்களை தேடியபொழுது ராணுவ வியூகமெல்லாம் வெளிபட்டது தெரிந்தது, யாரோ கருப்பாடு இருப்பதை ரஷ்ய கேஜிபி தேடியது
அந்நிலையில்தான் யாருக்கும் தெரியாமல் தன் யூத மனைவியினை இஸ்ரேலில் வைத்திருந்த கோகன் பிள்ளை பாசத்தில் சிக்கலில் சிக்கினார், அப்பொழுதே குறிவைத்தது கேஜிபி
பின் அவர் சில தொலைபேசி உரையாடல் இன்னும் பல வயர்லெஸ் உரையாடல் செய்யும்பொழுது கையும் களவுமாக பிடித்தார்கள், விஷயம் சிக்கலானது
அமெரிக்கா போப்பாண்டவர் என யாரெல்லாம் கேட்டும் மறுத்த சிரியா 1965ல் அவரை தூக்கிலிட்டது, பின் அவரின் ஒவ்வொரு பொருளாக சோதித்தார்கள், அப்பொழுது சிக்கியதுதான் அந்த வாட்ச்
அதை ரஷ்ய உளவுதுறை கைபற்றி சோதித்து அதிர்ந்தது எனினும் இனி ஆபத்தில்லை என சிரியாவிடமே கொடுத்தார்கள், சிரியா பல காரணங்களுக்காக அதனை பாதுகாத்தது
இதெல்லாம் 1965ல் நடந்து முடிந்தது, பொது இடத்தில் கொல்லபட்ட கோகனின் உடல் சிரியாவிலே புதைக்கபட்டது
எனினும் அவரின் வாட்ச் உள்ளிட்ட அடையாளங்களையும் அவரின் கல்லறை அடையாளங்களையும் குறிவைத்தது மொசாட்
2012ல் சிரியாவில் உச்சபட்ச குழப்பம் ஏற்பட்டு ஒரு டஜன் இயக்கமும் ரஷ்யாவும் அமெரிக்காவும் புகுந்த குழப்பாமான காலங்களில் மொசாத்தும் புகுந்து கோகனின் எல்லா அடையாளஙக்ளையும் அள்ளி வந்தது
1950களில் சிரியாவில் புகுந்த எலி கோகன் சுமார் 14 ஆண்டுகள் அங்கே சிரியராக வாழ்ந்து சிரிய ராணுவத்தில் ஊடுருவி தகவல்களை இஸ்ரேலுக்கு கடத்தினார், தொடக்க கால இஸ்ரேல் நிலைக்கவும் போரில் வெல்லவும் அவரே காரணமானார்
அப்படிபட்ட எலிகோகனின் அடையாளங்களை 2019ல் அடித்து வந்தது மொசாத், அப்பொழுது அந்த வாட்சை தூக்கி காட்டினார் நேதன்யாகு
அது சாதாரண வாட்ச் போல தெரிந்தாலும் , அது அன்றே உளவு வாட்சாக இருந்தது என்பதும் ஏகபட்ட ஒளி ஒலிபிடிப்பு மற்றும் பரப்பும் வாட்சாக இருந்ததும் அப்பொழுதான் மெல்ல சிலருக்கு புரிந்தது
1960களிலே அப்படி ஒரு தொழில்நுட்பமிக்க வாட்ச் இருந்திருக்கின்றது, உளவு உலகம் என்பது அதுதான்
அப்பொழுதே அப்படிஎன்றால் இப்பொழுதிருக்கும் காலகட்டத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்பதை ஊகிக்க கடினமானது அல்ல
