உள்ளாட்சி தேர்தலில் திமுக அரண்டு போய் இருக்கின்றது

பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு பம்மி, வாக்கெடுப்பினை புறக்கணித்து பாஜகவுக்கு ரகசிய உதவி செய்கின்றது என அதன் மானம் காற்றில் பறக்கின்றது

உள்ளாட்சி தேர்தலில் திமுக அரண்டு போய் இருக்கின்றது, ஆம் திமுக மேலிடம் ஒரு குடும்பத்திடம் சிக்கி கிடப்பது போல ஒவ்வொரு ஊர் திமுகவும் ஒரு குடும்பத்திடம் சிக்கி கிடக்கின்றது

அவர்களிடம் குடும்ப அரசியல் வேண்டாம் என சொல்லும் தகுதி திமுக தலமைக்கு இல்லை, காரணம் அப்படி சொன்னால் உதயநிதி நோக்கி வாயில் கைவைத்து சிரிப்பார்கள்

ஆனால் திமுக தலமையிடம் காட்டும் அமைதியினை திமுக வம்பர்கள் மற்ற தலமையிடம் காட்டபோவதில்லை

இது போக பாராளுமன்றத்திலே சீட் பங்கு கேட்டு பணமும் கேட்ட கூட்டணி கட்சிகள் இங்கும் கையினை நீட்டுகின்றன

இதெல்லாம் திமுகவின் கழுத்தை நெறிக்கின்றது

இதனால் அதை நிறுத்த படாதபாடு படுகின்றது, மீறி அது நடந்தால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்படும், அது சட்டசபை தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என்பது திமுகவுக்கு தெரியும்

இதனால் எப்பாடு பட்டேனும் உள்ளாட்சி தேர்தலை தடுக்க துடிக்கின்றது