ஊழ்வினை

குறள்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

பொருள்:

ஊழ்வினையால் தனக்கு நேரப்போவதை தடுக்க, வேறு வழிமுறைகளை ஒருவன் மேற்கொண்டாலும், ஊழ்வினையானது அந்த வழிமுறைகளையே தனக்குத் துணையாக்கிகொண்டு ஊழ்வினைப்பயனை ஊட்டவல்லது என்று கூறப்படுகிறது.

ஊழ்வினைப் பயனை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும், அதிலிருந்து தப்ப இயலாது என்பது கருத்து. ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகார வரி.

(செய்தி வாசிக்கும் அம்மணி திருவள்ளுவரை திருவள்ளூர் என்கின்றது , அதற்கும் ஊழ்வினை சரியில்லை போல‌..)

https://m.facebook.com/story.php?story_fbid=2824821920883700&id=173167532715832