எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி
எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி
ஆக வெளிநாட்டு விவசாயிகளை வாழவைக்க கிளம்பிவிட்டார்கள், போகிற போக்கினை கண்டால் இனி சகலமும் இம்மாதிரியே இறக்குமதியாகும் போல
இந்நிலையிலும் விவசாயிக்கு என்ன சிக்கல்? உற்பத்தியினை தொடர்ந்து தக்கவைக்க என்னவழி? விலை குறைந்த நேரத்தில் விவசாயியினை காக்க என்ன வழி என ஒரு தலைவனும் விவாதிக்க காணோம்
ஒரு ஊடகமும், ஒரு அல்லக்கை கூட அதுபற்றி பேசகாணோம், மாறாக ஆளாளுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள்
கடன்களை தள்ளுபடி செய்வது தீர்வல்ல, அது மறுபடி மறுபடி அவனை கடனுக்குள்தான் தள்ளும்
அவனின் விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்காதவரை இங்கு சிக்கல் தீராது
இன்று அய்யகோ வெங்காயம் என ஒப்பாரி வைப்பவனெல்லாம் வெங்காயம் கிலோ 5க்கும் பத்துக்கும் விற்கபட்டபொழுது சந்தோஷமாக வாங்கி குவித்தவனே, விவசாயியின் கண்ணீர் அன்று அவனுக்கு கொஞ்சமும் தெரியவில்லை
அப்படிபட்ட சமூகம் இது, முழு சுயநல கூட்டம்
இனி என்ன செய்யலாம், இந்திய விவசாயிகள் இங்கு விவசாயம் செய்வதை விட வெளிநாட்டில் செய்யலாம், அப்படியானால் இந்திய அரசு என்ன விலை கொடுத்தேனும் வாங்கிவிடும் போல் தெரிகின்றது
ஆக ஆப்ரிக்கா செல்வோம் , ஆளுக்கு 50 ஏக்கர் நிலம் வாங்குவோம், விளையவைத்து இந்தியாவிடமே விற்றுவிடலாம், நல்ல விலை கிடைக்கும்.
இந்திய விவசாயிகளுக்கு இனி வெளிநாட்டில்தான் எதிர்காலம்