எங்கள் அடையாளத்தை அழிக்க நினைக்காதே , எங்களை அடையாளமாற்றவர் ஆக்காதே

ஈரானிய மக்கள் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும்பொழுது எழுப்பிய கோஷம் கவனிக்கதக்கது, ஆம் அவர்கள் எழுப்பிய கோஷங்களில் ஒன்று “எங்கள் அடையாளத்தை அழிக்க நினைக்காதே , எங்களை அடையாளமாற்றவர் ஆக்காதே” என்பது

ஆம் அந்த டிரம்ப் உளறுவாய்தனமாக யுத்தம் நடந்தால் ஈரானில் 52 இடங்களை குறிவைத்திருப்பதாக சொன்னார் அல்லவா?

அதில் ஈரானின் தொல்பொருள் அடையாளம், அவர்களின் கலாச்சார பெருமைகள், மத அடையாளம் என ஏராள விஷயங்கள் உண்டு

ஒரு இனத்தை குழப்ப வேண்டும் அவர்களை எதிர்காலம் தெரியாமல் ஆக்கிவிடவேண்டுமானால் அவனின் இனம் அதன் பாரம்பரியம் இவற்றை அழித்தால் போதும்

வந்தவழி தெரியாதவனுக்கு செல்லும்வழி தெரியாது என்பது போல அவன் ஒருமாதிரி சுற்ற தொடங்கிவிடுவான், கண் தெரியா பறவை போல, தன் தொழுவம் மறந்த கன்றுபோல் ஆகிவிடுவான்

இதை தொடங்கி வைத்தவன் அலெக்ஸாண்டர், எகிப்தில் எகிப்திய அடையாளத்தை அழித்து அலெக்ஸாண்ட்ரியா எனும் கிரேக்க கலாச்சார பட்டணத்தை அவன் ஏற்படுத்தினான்

செல்லும் இடமெல்லாம் இதை செய்தான், இன்றைய பாகிஸ்தானின் எல்லையில் அவன் குதிரை நினைவாக அவன் எழுப்பிய புக்கிலேஸ் எனும் இடம் இன்றும் உண்டு

விஷயம் இதுதான், ஒருவன் கலாச்சாரத்தை அவன் அடையாளத்தை இல்லாமல் ஆக்கு அவனை அடக்குவது எளிது

ஈராக்கில் கூட அமெரிக்கா இதை செய்தது, பாபிலோன் எனும் மாபெரும் நகரத்தின் அடையாளம் எதுவும் இன்று இல்லை, நெபுகாத்நேச்சர் காலம், மெசபடோபியா காலத்தின் அடையாளம் என எதுவுமில்லை

இதை கிறிஸ்தவர்களிடம் கேட்டால், இதெல்லாம் அயோக்கியதனம் இல்லையா என கேட்டால் பாபிலோன் கடவுளால் சபிக்கபட்ட நகரம் என்பார்கள், கொஞ்சமும் வருத்தமோ இரக்கமோ வராது

சிரியாவிலும் இது நடந்தது

பைபிள் உலகெல்லாம் ஏற்படுத்தியிருக்கும் மாய மயக்க நிலை அது, சுய அறிவில் யோசிக்காமல் பைபிள் பிரகாரம் யோசித்து நியாய தர்மத்தை மறப்பார்கள்

ஈரானை நொறுக்க திட்டமிட்ட அமெரிக்கா 52 இடங்களில் பெரும்பாலும் அவர்களின் கலாச்சார அடையாளம், பழம்பெரும் அடையாளங்களை நொறுக்கி மனதாலும் நினைவாலும் அவர்களை உடைத்து எதிர்காலத்தில் ஈரானின் பெருமை என எதுவுமில்லை என ஆக்கிவிடுவது

டிரம்பும் ஈரானியருக்கு பெரும் உதவி செய்தார், 52 இலக்கு எது என அரைமணிநேரம் வாசித்ததில் எல்லா இடங்களையும் சொல்ல ஈரானியர் கொந்தளித்துவிட்டனர்

கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு எழுப்பபட்டிருக்கின்றது

கவனியுங்கள், எவ்வளவு நுட்பமான வன்மம் இருந்தால் ஈரானின் கலாச்சாரத்தை உடைத்து அவர்களை ஒரு அடையாளமில்லாத அல்லக்கை மக்களாக காட்டுமிராண்டிகளாக ஆக்க நினைத்திருப்பார்கள்?

அமெரிக்கா ஏன் இந்த எல்லைக்கு சென்றது?

விஷயம் வேறொன்றுமில்லை ஈரானின் எழுச்சி அப்படியானது கோமேனி எனும் அவர்களின் தெய்வமகன் அப்படி ஆக்கிவைத்திருந்தான்

அதில் மதரீதியான அமைப்புகள் உள்ளே புகமுடியவில்லை, மறைக்க ஒன்றுமில்லை அமெரிக்க தூதரகம் இல்லா நிலையில் அங்கு அன்னிய சக்திகள் புகமுடியவில்லை

இந்த தலித் போராட்டம், இலக்கியம், கம்யூனிசம், இன விடுதலை, இரண்டாயிரம் ஆண்டு அடிமை, பகுத்தறிவு போன்ற தேசவிரோத செயல்கள் இல்லை

முக்கியமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இல்லை

அதனால் ஈரானின் கலாச்சாரத்தை ஈரானிய மக்களின் மனதை மயக்கி, பகுத்தறிவு கம்யூனிசம் தலித் விடுதலை,பார்ப்பன எதிர்ப்பு, சாத்தானை வணங்காதே என பைபிளை கொடுத்து மயக்கி இன்னபிற குழப்பங்களை செய்யமுடியவில்லை

அந்த வன்மத்தில் இப்படி ட்ரம்ப் வார்த்தைகளை கொட்ட, ஈரானிய மக்கள் பிடித்து கொண்டனர்

இந்தியாவின் நிலையினை எடுத்து கொள்ளுங்கள், கண்ணீர் வரும்

இன்று ஈராக்கில் அமெரிக்கா செய்ததை, ஈரானில் செய்ய விரும்புவதை இங்கு ஆத்ம சுத்தியுடன் செய்தான் பிரிட்டிஷ்காரன்

அவனே இங்கு எல்லா குழப்பத்தையும் தொடங்கிவைத்தான், இன்றளவும் அது பரவி நிற்கின்றது இன்னும் பரவ துடிக்கின்றது

இங்கு கோமேனி போல் யாருமில்லை, இங்கு கலாச்சரத்தை பற்றி கவலை இல்லை, மதம் பற்றி அக்கறை இல்லை

மதம் இன்றி பண்டைய அடையாளத்தை எப்படி காப்பீர்கள்?

தமிழ்மொழி நிலைக்கவும் தமிழ்கலாச்சாரம் காக்கவும் இந்துமதமும் இந்து ஆலயங்களும் மகா முக்கியம் தமிழரின் ஆன்மா அதில்தான் இருக்கின்றது

இந்துமதம் வாழாமல் இந்தியா எப்படி வாழும்? இந்நாட்டு கலாச்சாரம் இதிகாசமும் ஞானமும் இன்னும் பல அடையாளங்களும் நிலைக்காமல் எப்படி எதிர்கால இந்தியா நிலைத்து நிற்கும்?

இப்பொழுது தமிழ்நாட்டு தேசவிரோத சக்திகளை மனதில் நினையுங்கள், பெருமூச்சோடு ஒரு உண்மை விளங்கும்

தமிழனுக்கு மதமில்லை என ஏன் சொன்னார்கள் என்பது விளங்கும், எது மானமோ அதை மறைத்தார்கள். தமிழ் தமிழன் இந்து எனும் மானத்தை மறைப்பதே தன்மானம் சுயமரியாதை என இல்லா கதைகளை ஏன் சொன்னார்கள் என்பது விளங்கும்

இந்துமதத்தை ஏன் குறிவைத்து அடிக்கின்றார்கள் என்பது விளங்கும்

இந்தியாவினை இணைக்கும் இந்து, இந்தி, சமஸ்கிருதம் என எல்லாவற்றையும் ஏன் சில கோஷ்டி எதிர்க்கின்றது என்பது தெரியும்

இந்த கோஷ்டிகளின் பிதாமகன்களான அம்பேத்கரும் பெரியாரும் யாரின் கைகூலி என்பது விளங்கும்

கம்யூனிஸ்டுகள் இத்தேசத்தில் யாருக்காக அரசியல் செய்கின்றார்கள் எனபது புரியும்

சீனாவின் எழுச்சி அதன் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் ஒவ்வொரு சீனனும் உணர்வதில் இருக்கின்றது என்றான் மாவோ, அந்த சீனம் எழும்பிற்று

கோமேனி அதையே ஈரானியருக்கு செய்தான் , அந்த தேசம் அரேபியாவில் தன் எண்ணெயினை காத்து நின்று அமெரிக்காவுக்கு சவால்விடுகின்றது

அருமை இந்தியாவில் தன் நிலையினை இந்தியன் உணர்ந்துவிட கூடாது அவனின் கலாச்சாரமும் அடையாளமும் அதன் பெருமையினையும் அவன் உணர்ந்துவிட கூடாது, மாறாக தனக்கு மதமில்லை அடையாளமில்லை தான் காட்டுமிராண்டி என அவனாக எண்ணி யானை சங்கிலிக்கு வலிய செல்வது போல் செல்ல வேண்டும் என்பதுதான் இங்குள்ள அந்நிய கைகூலிகளின் ஆசை

எங்கள் கலாச்சாரமும் மதமும் எங்கள் அடையாளம், அதை ஒரு காலமும் விட்டு தரமாட்டோம், நாம் இன்று இஸ்லாமியராயினும் அக்காலத்தில் இருந்தே பெரும் கலாச்சாரத்தை தனித்துவத்தை காத்துவந்தோம், அதை எப்பாடுபாட்டேனும் காப்போம் என சிலிர்த்து நிற்கும் ஈரானிய மக்களுக்கு வாழ்த்துக்கள்

ஏ வணக்கத்துகுரிய ஈரானிய மக்களே, மான உணர்ச்சியும் அறிவும் சிந்தனையும் சுயமரியாதையும் பகுத்தறிவும் கொண்ட பெருமக்களே

உங்கள் போராட்டம் மாபெரும் வெற்றி அடையும் , ஈரான் எனும் அந்த உயர்ந்த பூமி எக்காலமும் தன் தனித்துவத்தை காக்கும், காரணம் உண்மையும் சத்தியமும் உங்களுக்கு விளங்கிவிட்டது

ஆசியா உங்களை வணங்குகின்றது, உங்களால் பெருமை அடைகின்றது

கொஞ்சம் உங்கள் மூச்சு காற்றை தமிழகம் நோக்கி ஊதுங்கள், தமிழனுக்கு அறிவு வரட்டும்

கொஞ்சம் உங்கள் கால்களை அரபு கடலில் நனையுங்கள், உங்களின் மான உணர்ச்சி கடல் அலையாய் தமிழகத்துக்கு வரட்டும்.