எங்கிருந்து காவேரி வரும்? அரை சொம்பு நீர் கூட வராது
அது தேவகடவுவோ இல்லை எடியூரப்பாவோ இல்லை மல்லிகார்ஜூன கார்கேகோ, சித்தரய்யாவோ கன்னடத்தில் காவேரிக்காக போராடினால் ஒரே அணியில் இருப்பார்கள்
ஆளும் கட்சி போராட்டத்திற்கு எதிர்கட்சியும், எதிர்கட்சி போராட்டத்திற்கு ஆளும் கட்சியும் காவேரி என்றால் ஒரே அணியில் நிற்கும்
இங்கு ஆளுங்கட்சி ஒருநாள் உண்ணும் விரதம் நடத்தியது.
இன்று எதிர்கட்சி முழுஅடைப்பு நடத்துகின்றது, அரசோ தமிழகம் வழக்கம் போல இயங்கும் என்கின்றது
வரலாற்றில் படித்தால் இந்த அதிமுக இன்றல்ல அன்றிலிருந்தே அது தொடங்கியதில் இருந்தே இப்படித்தான்
மிசா கொடுமையினை வரவேற்பார்கள், கச்சதீவுக்கு வாருங்கள் என்றால் இந்திரா வாழ்க கலைஞர் ஒழிக என்பார்கள்
ஈழசிக்கலுக்கு பேசுவோம் என்றால் நாங்கள் பிரபாகரன் வழி என்பார்கள் ஆனால் அமைதிபடை செல்வதை வரவேற்பார்கள்
எதிலும் தொலை நோக்கு இருக்காது, சிந்தனை இருக்காது , தமிழக நலன் சுத்தமாக தோன்றாது, எந்த சவாலும் எடுக்கவும் மாட்டார்கள். டெல்லி என்ன சொல்லுமோ அதை கேட்டு அப்படியே செய்வார்கள்
டெல்லி என்ன சொல்லும்? தமிழகத்தில் எழும் உரிமை குரலை அடக்க சொல்லும் அல்லது குழப்ப சொல்லும். அதை அப்படியே செய்வார்கள்
கடந்த 45 வருடமாக இதையேதான் செய்துகொண்டிருக்கின்றது அதிமுக
ஒரு உருப்படியான போராட்டமோ, உணர்ச்சி பூர்வமோ அவர்களுக்கு இருக்காது. அவர்களின் போராட்டம், அழுகை கண்ணீர் எல்லாம் அவர்கள் தலைவர்களுக்காக மட்டுமே இருக்க்கும்
உதாரணம் இன்று காவேரி சிறைபட்டிருக்கும்போது வராத கோபமும், கொந்தளிப்பும் அன்று ஜெயா ஊழல் வழக்கில் பெங்களூரில் சிறைபட்டபொழுது வந்தது, அப்படி ஆடினார்கள்
அப்படிபட்ட அடிமை ஆட்டுமந்தை கூட்டம் அது
அன்றே டெல்லிக்கு அடிமையான கட்சியிடம் இன்றுமட்டும் என்ன எதிர்பார்த்துவிட முடியும்
தமிழகத்து மிகபெரும் சாபகேடு அதிமுக, அதுவும் செய்யாது, போராடும் திமுகவினையும் முழுக்க போராடவிடாது
அந்த சாபத்தின் தொடர்ச்சி இன்றும் காவேரி பிரச்சினையிலும் தொடர்ந்து வருகின்றது.
பின் எங்கிருந்து காவேரி வரும்? அரை சொம்பு நீர் கூட வராது.
தமிழகத்திற்கு வரவேண்டிய 25 ஆயிரம் கோடி முதலீடான மோட்டார் பாக தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றது
திரும்பும் இடமெல்லாம் தமிழகத்தில் போராட்டம், ஆளாளுக்கு கொடி அவனவனுக்கொரு கூட்டம், இதனிடையே டோல் கேட்டை கூட உடைக்கின்றார்கள்
மாநில அரசு சயன புத்தர் கோலத்தில் இருக்கின்றது
பின் எங்கிருந்து அந்நிய முதலீடு வரும்?, சுற்றுபயணிகள் வந்து சென்றாலே அபூர்வம்.