எசமான் சொல்லுங்க..
யாரு மோடியா?
ஆமாம்ஜி , டிரம்ப்ஜியா?
டிரம்ப்ஜி இல்ல டிரம் D.. Donalad Trump
எசமான் சொல்லுங்க..
யாருய்யா அது அத்திவரதர், ஒரே பரபரப்பா இருக்கு?
அய்யா அவர் சக்தியுள்ள தெய்வமுங்க, 40 வருஷத்துக்கு ஒருவாட்டிதான் அவர் சிலைய பார்க்கமுடியுமுங்க, நினைச்சி வந்து வணங்கினா நல்லதுநடக்குமுங்க
இஸ் இட்? எனக்கும் ஒரே பிரச்சினை. வடகொரிய அதிபர் சீன அதிபரோட சேர்ந்து சிரிக்குறான். ஈரான பக்கமே போகமுடியல ஒரு பயலும் கூட வரமாட்டேங்குறான், சிரியாவுல தோல்வி, வென்சுலாவிலும் புட்டீன் கட்டைய போடுறார், எல்லாம் ஒரே இடைஞ்சலா இருக்கு
நீங்க வந்து அத்தி வரதர பார்த்துட்டு போங்க, எல்லாம் சரியாகும்
அப்படியா?
ஆமாம், முதல்ல கேதர்நாத் குகைக்கு வாங்க அதுக்கப்புறம் வடகொரிய அதிபரே வெள்ளைமாளிகைக்கு கூர்க்கா ஆயிருவார், அப்புறம் அத்திவரதர பாருங்க ஈரான் உங்க வீட்டு நாய்குட்டியா சுத்தி சுத்தி வரும்
நடக்குமா?
எனக்கு நடந்திருக்கு டிரம்ப்ஜி இல்ல டிரம்ப்டி, பாகிஸ்தான் சரிஞ்சி கிடக்கு, ராகுலை காணோம், சீனா சத்தமே இல்ல. இப்போ எனக்கு எதிரியே இல்ல தெரியுமா?
அப்போ நானும் வந்து வணங்கட்டுமா?
உடனே கிளம்புங்க, ஏற்பாடு நான் செய்றேன்
யோசிச்சி சொல்றேன்
யோசிக்க என்ன இருக்கு? ஜெருசலேம் சுவர்ல முட்டிட்டு எல்லாம் நின்னீங்க சமூகம்? சும்மா வாங்க
இல்ல மோடி, எல்லோரும் சிரிப்பாங்க
இப்போ மட்டும் சிரிக்காமலா இருகாங்க, போங்க டிம்ரப் D..