எச்.ராசாவின் அட்மின் பிடிபட்ட தருணம்..

ஏம்பா எச்.ராசா அட்மின், நீ யாருன்னு தெரிஞ்சி போச்சாம், பெரும் படை வந்துகொண்டிருக்கின்றதாம்
நீ தப்புவதற்கு ஒரே வழிதான் இருக்கின்றது
நாளை எச்.ராசா பெரியார் திடலில் மன்னிப்பு கேட்பார் என ஒரு பதிவினை இட்டுவிட்டால் உன்னை தமிழகம் மன்னிக்க தயார்
ராசா நீதான் தவறு செய்தாய் என்கின்றார், நீயே பிராயசித்தம் தேடிக்கொள்
என்ன கட்சி இது? ஒருவன் சிக்கிவிட்டால் அப்படியே விட்டுவிடுவார்கள் போல
ராசா சிக்கலில் மாட்டினால் கட்சி தலைவர் தமிழிசை அவர் கருத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்கின்றார், தமிழிசை சிக்கினால் இல.கணேசன் தமிழிசையின் சொந்த கருத்து என்கின்றார்
ராசா இப்பொழுது அட்மினை கை காட்டுகின்றார், கட்சி கோட்பாடு இப்படி கூட இருப்பவனை பிடித்துகொடுப்பது போல
தாமரை கட்சி அல்லவா? அதனால் கட்சிக்காரர் எனும் நீர்மேல் ஒட்டாமல் இருப்பார்களோ?
அது இருக்கட்டும், ராசா அட்மின் அவர்களே, உடனே எச்.ராசா கருப்பு சட்டை அணிந்து பெரியார் திடல் வந்து மன்னிப்பு கேட்பார் என பதிவிடும்
குஷ்பு முன்னிலையில் மன்னிப்பு கேட்பார் என கூடுதலாக பதிவிட்டால் சங்கத்து சார்பாக உமக்கு விழா எடுத்து பொற்கிழி வழங்கபடுமய்யா, வாய்ப்பை விட்டுவிடாதீர்