எஞ்சியிருக்கும் மிக சில மிசா கொடுமைகளின் அடையாளங்களில் முக ஸ்டாலினும் ஒருவர்

தமிழகத்தில் எஞ்சியிருக்கும் மிக சில மிசா கொடுமைகளின் அடையாளங்களில் முக ஸ்டாலினும் ஒருவர்

அந்த வகையில் அவருக்கு நிகரான சமகால அரசியல்வாதி திமுகவின் சிலரை தவிர, கம்யூனிஸ்டுகளான நல்லகண்ணு, தா.பாண்டியன் தவிர யாருமில்லை.

முக ஸ்டாலினுக்கும் மறுபக்கம் உண்டு

அந்த மிசா கால கொடும் சித்திரவதைகளின் தழும்புகளில் அவரும் ஒருவர்.

பழனிச்சாமி, ஜெயக்குமார், தினகரன், கமலஹாசன், சைமன், தமிழிசை, ராமதாஸ், விஜயகாந்த் , பிரேமலதா என யாரும் அவரை நோக்கி இவ்வவிஷயத்தில் கையினை கூட தூக்க முடியாது

அவர்கள் யாருக்கும் இல்லா தகுதி ஸ்டாலினுக்கே உண்டு

இவர்கள் எல்லாம் அந்த கொடும் காலங்களில் எங்கிருந்தார்கள் என்றே தெரியாது

ஸ்டாலின் சிறையில் இருந்த காலங்களில் கமலஹாசன் விசிலடிச்சான் குஞ்சுகளா என குட்டிபத்மினியோடு ஆடிகொண்டிருந்தார்

ராமதாஸ் கிளினிக்கில் தடுமாறிகொண்டிருந்தார்

தமிழிசை ஏதோ ஒரு படத்து சிம்ரன் போல இரட்டை சடையுடன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்

சைமனுக்கு அப்பொழுது 8 வயது, கால்சட்டை கூட இல்லாமல் சிவகங்கை பக்கம் ஓணான் பிடித்துகொண்டிருந்தார்

விஜயகாந்த் மதுரை பக்கம் அரிசி சுமந்துகொண்டிருந்தார்

ஏன் ஜெயலலிதாவே அப்பொழுது அரசியலில் இல்லை, சினிமா வாய்ப்பு தேடிகொண்டிருந்தார்

ஆம் இவர்கள் எல்லாம் இப்படி சுற்றிகொண்டிருக்க அன்றே அரசியலில் பொதுவாழ்வில் சிறையில் என சுற்றிகொண்டிருந்தார் ஸ்டாலின்

அதை யார் மறுக்க முடியும்? தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு அதுவும் காரணமாக இருக்கலாம்