எட்வர்ட்ஸ் ஸ்னோர்டனை உங்களுக்கு நினைவிருக்கலாம்
எட்வர்ட்ஸ் ஸ்னோர்டனை உங்களுக்கு நினைவிருக்கலாம், அமெரிக்காவில் ஒவ்வொரு குடிமக்களும் உளவு பார்க்கபடுகின்றனர், தனிபட்ட அந்தரங்க பாதுகாப்பு என அங்கு எதுவுமில்லை என பேட்டி கொடுத்து அதிர வைத்தவர்
சில தரவுகளோடு தப்பி ஹாங்காங் சென்றார், அமெரிக்கா வலைவீசி தேடியபொழுது ரஷ்யா தப்பினார், அந்நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கியது
இப்பொழுது அமெரிக்க உளவாளி ரஷ்யாவில் சிக்கியதை அடுத்து ஸ்னோர்டன் மேல் ரஷ்யாவுக்கு சில சந்தேகம் எழுந்துள்ளது , இவர் ஒருவேளை சி.ஐ.ஏ ஆளாக இருக்கலாமோ என ஒரு பொறி தட்டியதாக சில செய்திகள் கசிந்தன
இப்பொழுது பிரான்சில் அடைக்கலம் கேட்கின்றார் ஸ்னோடன், பலமுறை கேட்டும் கிடைக்கா அந்த புகலிடம் இனி கிடைக்கும் என நம்புகின்றார்
பிரான்ஸ் அமெரிக்காவுக்கு நெருங்கியநாடு என்றாலும் அங்கே ஏன் செல்ல விரும்புகின்றார்?
ஆக ரஷ்ய சந்தேகம் சரியோ என்னமோ?
