எதிர்க்க வேண்டியதும் , ஒழித்துகட்ட வேண்டியதும் அதிமுக எனும் கட்சி

நீங்கள் என்ன சொன்னாலும் சரி, தமிழகத்தில் செய்ய வேண்டியது பிராமண எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு எல்லாம் அல்ல‌

எதிர்க்க வேண்டியதும் , ஒழித்துகட்ட வேண்டியதும் அதிமுக எனும் கட்சி

அதற்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. எதற்காக அது இயங்குகின்றது என்பது அவர்களுக்கே தெரியாது

அதுவே இம்மாநிலத்தின் பெரும் சாபக்கேடு, அந்த சாக்கடையில் இருந்து பல கொசுக்கள் வந்துகொண்டே இருக்கும்

நேற்று கூட ஒரு டெங்கி கொசுவும், மலேரியா கொசுவும் பரிவட்டத்தோடு நின்றது, பார்க்க சகிக்கவில்லை

ஆக இந்த பிராமண, மோடி, இந்துத்வா எதிர்ப்பை எல்லாம் விட்டுவிட்டு அதிமுகவினை ஒழிக்கபாருங்கள், அந்த சாக்கடையினை மூடுங்கள்

அதை செய்தால் தமிழகம் உருப்படும், இதை சொல்ல தயக்கம் ஏதுமில்லை

தமிழகத்தை நாசமாக்கியது சினிமாவும் அது புகுந்த நாடக அரசியலுமே

தமிழகத்தை சினிமா மோகம் கெடுத்ததே அன்றி பிராமணமோ, இந்துத்த்வாவோ அல்ல..

தமிழகம் நலம்பெற சினிமாவினை வைக்க வேண்டிய இடத்தில் வையுங்கள், சினிமா கட்சிகள் எல்லாம் ஒழிக்கபடட்டும்

அதனை செய்யாமல் சும்மா பிராமணன், இந்துத்வா அபாயம், மோடி, அது இது என சொல்லிகொண்டிருப்பது வடிகட்டிய முட்டாள்தனம்

அந்த முட்டாள்தனத்தை தொடர்ந்து செய்வதாக இருந்தால் தாராளமாய் செய்யுங்கள், ஆனால் நிலமை இன்னும் மோசமாக ஆகுமே தவிர உருப்படாது