எந்த தும்பிகள்?
தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என தும்பிகள் கத்த தொடங்கிவிட்டன
எந்த தும்பிகள்?
முன்பு மும்பை தாராவி பக்கம் சென்று சிவசேனைக்கு வாக்கு கேட்ட அதே சைமனின் தும்பிகள், ஆம் அவர்களேதான்
இதில் லீகுவான் யூ தமிழர் அபிமானி என அவருக்கு அஞ்சலியும் செய்வது இதே கூட்டம்தான்..
தமிழன் ஜப்பான் முதல் அமெரிக்கா வரை செல்லலாம், ரஷ்யா முதல் தென்னாப்ரிக்கா வரை செல்லலாம்
ஏன் சிங்கப்பூர், ஹாங்காங், அரபுநாடுகளுக்கு எல்லாம் செல்லலாம் அங்கிருந்து நாம் தமிழர் கட்சிக்கு நன்கொடை எல்லாம் அனுப்பலாம்
தமிழன் கனடா, பிரான்ஸ், லண்டன் என செல்லலாம் கொடிகட்டி பறக்கலாம், இவர்களுக்கு காசும் அனுப்பலாம்
ஆனால் தமிழ்நாட்டுக்கு வடக்கே இருந்து எவனும் வந்துவிட கூடாது இவர்கள் விடவே மாட்டார்களாம்
எப்படிபட்ட விஷேஷமான அறிவுள்ள கூட்டம் இது
எம்மிடம் காலையிலே ஒரு தும்பி வந்தது
அண்ணே தமிழ்நாட்டு வேலை எல்லாம் தமிழனுக்குத்தான் வேண்டும்
“இந்த பைலட் வேலை, கல்பாக்கம் கூடன் குள அணுவுலையில் தலமை விஞ்ஞானி வேலை எல்லாம் காலியாக இருகின்றதாம் செல்கின்றாயா?” என கேட்டால் தும்பி முறைத்தது
“சரி அதைவிடு, இந்த கட்டட வேலை,பெயின்ட் வேலை ரெஸ்ட்டாரன்ட் வேலை எல்லாம் நீ செய்தால் எதற்கு வடநாட்டவன் இங்கு வருவான்?” என கேட்பதற்குள் தும்பியினை காணவில்லை
தனக்கு என்ன வேலை தெரியும் என கூட சொல்ல தெரியாதவன் எல்லாம் வடமாநிலத்தவனுக்கு வேலை கொடுக்க கூடாது என போராட வருவதுதான் சோகம்…