எந்நாடு உரிமையில் சிறந்தது?

உய்குர் எனும் சீனபகுதி இஸ்லாமியர் இன்னும் சில மாதங்களுக்குள் அங்கி அணிதல் தாடி இல்லாமல் மீசை வைத்தல், குல்லா வைத்தல், இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிதல் ஏன் கண்ட இடத்தில் சலாம் சொல்லுதல் போன்ற அரேபிய அடையாளங்களை தொலைத்துவிட்டு சீன கலாச்சாரத்திற்கு திரும்பும் படி உத்தரவிட்டிருப்பது இதே ஜின்பெங்

ஆம் பாகிஸ்தானே சீனாவின் உள் விவகாரங்களில்……….. என தொடை நடுங்கியபடி அதை கண்டிக்க வழியின்றி ஒதுங்கிவிட்டது

சீனாவினை பகைக்க விரும்பா சவுதியும் ஈரானும் கூட அந்த விவகாரத்தை தொட தயங்கி பின்வாங்கின, உலகிலே மிககடுமையான யாரும் செய்யாத அடக்குமுறையினை இஸ்லாமியர் மேல் செய்கின்றது சைனா

உய்குர் விஷயத்தில் தலையிட்டதே பின்லேடன் ஒழிந்து போக காரணம்

இஸ்லாம் என்பது அரேபிய அடையாளம் அது சீனாவில் பரவ அனுமதிக்க முடியாது என சொல்லி எச்சரித்திருக்கும் ஜின்பெங்க்தான் மாமல்லபுரம் வருகின்றார்

அதனால் கத்தும் இஸ்லாமிய அன்பர்கள் யோசித்துவிட்டு கத்தவும், இந்தியாவில் உங்களுக்கு என்ன சுதந்திரமில்லை? உங்கள் வழிபாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் என்ன இடைஞ்சல் வந்தது?

இஸ்லாமியருக்கு பூரண சுதந்திரம் கொடுத்திருக்கும் இந்நாட்டை கண்டித்துவிட்டு இஸ்லாமியரை அடைக்கி ஒடுக்கி துப்பாக்கி முனையில் சீனராக்கும் அந்த நாட்டு அதிபரை வரவேற்க கொஞ்சமும் வெட்கமாக இல்லை?

முக ஸ்டாலினுக்குத்தான் வழக்கம் போல‌ இதெல்லாம் தெரியாது, உங்களுக்குமா தெரியாது?

கிறிஸ்தவ அன்பர்களே, சீனாவில் கிறிஸ்தவ நிலை தெரியுமல்லவா?

பாதாள அறை சர்ச்சுகள் கூட தேடிபிடித்து சீல் வைக்கபடுகின்றன, கிறிஸ்தவ போதனையாளனுக்கு சிறை, வெளிநாட்டில் இருந்து வந்தால் விசாவே இல்லை

ஆனால் இங்கு வேளாங்கண்ணி ஆலயம் முதல் முட்டுசந்து வரை உங்களால் கிறிஸ்தவம் பேசமுடிகின்றது, சுதந்திரமாக ஆடமுடிகின்றது

எந்நாடு உரிமையில் சிறந்தது?

பைபிள் மேல் சத்தியமாக சொல்லுங்கள்? சிலுவைமேல் கைவைத்து சொல்லுங்கள்?

அப்படி கை வைத்துவிட்டு மோடி திரும்பி போ, ஜின் பெங் வா என மனதார சொன்னால் நீங்கள் கிறிஸ்துவினை சிலுவையில் அடிக்கும் சாத்தான் அன்றி வேறு யார்?