என்னடா பிளான்?
எதை வேண்டுமானாலும் பொறுத்துகொள்ளலாம் முக ஸ்டாலின் எடப்பாடியினை வாழப்பாடி என்பதை கூட சகித்துகொள்ளலாம், பன்னீர்செல்வம் நன்றி விசுவாசம் பற்றி பேசுவதை கூட பல்லை கடித்து சகிக்கலாம்
ஆனால் நித்தி சீட கோடிகள் செய்யும் அட்டகாசம் தாளவில்லை, இதில் வெறிபிடித்த சங்கிகள் சிலவும் கலந்திருக்கின்றது, அப்படி ஒன்று வந்து பேசியது
“அண்ணே, நீங்க விவரம் அறிஞ்சவருன்னு நினைச்சா இப்படி அப்பாவியா இருக்கீங்க, நித்திசாமி விவகாரத்துல நடக்குறதே வேற, அது நாடகம்
அடேய் அது நாடகம்னு ஊருக்கே தெரியும் ஆனால் இப்படி அவர விட்டிருக்க கூடாது
அண்ணே அதெல்லாம் மோடி உத்தரவு இல்லாம நடக்கும்னு நினைக்கிறீங்க, எல்லாம் பிளான்னே
என்னடா பிளான்?
அண்ணே அமெரிக்காகாரன் தொல்லை தாங்கமுடியல, எதுக்கெடுத்தாலும் மிரட்டுறான்., இதுனால அவன் நாட்டு பக்கமா ஒரு நாட்டுக்குள்ள ஊடுருவி நம்ம ராணுவத்தை நிறுத்த மோடி முடிவு செஞ்சாரு , ஆனா ஒரு பயலும் இடம் கொடுக்கல, பூரா பாவாடை பயலுக
ஆஹான்
இதுனால சாமிய ஏவிவிட்டு ஒரு நாட்டை உருவாக்க ஏற்பாடு செஞ்சாரு, அதுதான் கைலாசா
அப்புறம்
இது சாதாரண பிளான் இல்லண்ணே புட்டீன், ஜின்பெங், மோடி, நித்திசாமி எல்லோரும் சேர்ந்து எடுத்தமுடிவு
முடிவு பண்ணி?
இனி கைலாசா நாட்டுல இந்திய ராணுவம் நித்தி சீடர் மாதிரி இருக்கும், ஏகபட்ட ஏவுகனை ராணுவம்னு குவிச்சி வச்சிருப்போம், அமெரிக்காகாரன் எதும் வாலாட்டினா ஒரே அடி
ஏண்டா அமெரிக்க பாதுகாப்புன்னா என்னண்ணு தெரியுமா?
தெரியாது
3 ஆயிரம் கிமீ கடல் எல்லைவரை அவனுக எப்படி பாதுகாக்குறாங்கண்ணு தெரியுமா?
அதெல்லம் சாமிகிட்ட பலிக்காது
டேய் இப்படி கியூபாவுல ரஷ்யா ஏவுகனை நிறுத்தி ஆனானபட்ட சோவியத் யூனியனே ஓடுன கதை தெரியுமா?
ஹிஹிஹிஹி பொய் சொல்லாதீங்கண்ணே
டேய் .. நாடு அடையுறது என்ன தமிழ்நாட்டுல கட்சி தொடங்குறது மாதிரி ஈஸின்னு நினைச்சியா, வேணும்னா ஒண்ணு நடக்கும்
எதுண்ணே அமெரிக்கா நித்திசாமிய பார்த்து பயந்திரும் அப்படித்தானே?
கியூபா பக்கத்துல குவாண்டாமோ தீவுல பெரிய அமெரிக்க ஜெயில் இருக்கு, பின்லேடனை கூட அங்கதான் தூக்கிட்டு போனாங்கன்னு கதை, நீங்கெல்லாம் இப்படி பேசிட்டு இருந்தா கைலாசா தீவு இன்னொரு ஜெயிலா மாறும்”