என்னதான் இவர்கள் பிரச்சினையோ தெரியவில்லை

பஞ்சாபி முதல் பியூஸ் மனுஷ் போன்ற மார்வாடி வரை தமிழகத்துக்கு வரலாம் விவசாயம் செய்யலாம்

மலையாளி நிலமாக வாங்கி தோப்புகளை உருவாக்கலாம் அவனுக்கும் இலவச மின்சாரம்

இலவசமின்சாரம், விவசாய கடன் இன்னபிற சலுகைகளை எல்லா இந்தியனும் இங்கு அனுபவிக்கலாம்

ஏன் இங்கு அந்நிய நாட்டவரான ஈழதமிழனெல்லாம் வந்து குவியலாம்

பன்னாட்டு கம்பெனி கார்முதல் செல்போன் வரை விற்க வரலாம்

அவர்களுக்கும் நிலம், நீர் சலுகை எல்லாம் உண்டு

பஞ்சாபிய கோதுமையும் பாசுமதியும் வங்கத்து சீரக சம்பாவும் யாரும் விற்கலாம்

எங்கிருந்தெல்லாமோ பெப்சி இன்னபிற கம்பெனிகள் வந்து நீரை எடுத்து விற்கலாம்

அட வடக்கத்திய நடிகன் நடிகை வரலாம், மலையாளி வரலாம் தெலுங்கன் வரலாம் நடிக்கலாம் சம்பாதிக்கலாம்

மாநில முதல்வர்களே உலகெல்லாம் எங்கள் மாநிலத்துக்கு வந்து முதலீடு செய்யுங்கள் என உருகலாம்

ஆனால் சக இந்தியன் வந்து தமிழக
ரேஷன் கடையில் பொருள் வாங்க விடமாட்டோம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் சேரமாட்டோம்

என்னதான் இவர்கள் பிரச்சினையோ தெரியவில்லை