என்னது? கிறிஸ்தவ மதமா?

என்னது? கிறிஸ்தவ மதமா?

சரி கிறிஸ்தவ மதம் என வைத்துகொண்டாலும் நாஸ்டர்டாமஸ் எப்பொழுது பிறந்தார் என்பது கூடவா தெரியாது

மெதுவாக இந்த தும்பிகளிடம் காதோரம் சென்று நாஸ்டர்டாமஸ் யார்? எங்கே பிறந்தார்? எப்படி இருந்தார் என கேளுங்கள், ரகசியமாக இப்படி சொல்வார்கள்

“அவர் யாழ்பாணம் அருகே வல்வெட்டிதுறை பக்கம் பிறந்தாராம், கட்டையாக குண்டாக இருந்தாராம், சூரியன் எப்பொழுது உதிக்கும் அலை எப்பொழுது வீசும் என்பதை அன்றே சொன்னவர் அவர்தானாம்

அவர்தான் இப்படி சைமனை பற்றி சொன்னார், அவர் சொன்னால் கண்டிப்பாக நடக்கும்”

சரி, முக்கடல் என்பது எங்கெல்லாம் தீபகற்பம் உண்டோ அங்கெல்லாம் சங்கமிக்கும். அது தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, சிங்கப்பூர் பக்கம், ஜப்பான் கொரியா, சைனா பக்கம் எல்லாம் சங்கமிக்கும்

ஆக ஏகபட்ட சைமன்கள் வருவார்களோ? என கேட்டால் தும்பிகள் ஓடிவிடும்